நம்பிக்கை இல்லா தீர்மான்ம் தோல்வி: பா.ஜ.கவுக்கு திமுக கடும் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பிரதமர் வாஜ்பாய் அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் மக்களவையில் நேற்றுநள்ளிரவு தோற்கடிக்கப்பட்டது.

அரசுக்கு ஆதரவாக 312 வாக்குகளும் எதிராக 186 வாக்குகளும் விழுந்தன. அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்துபெரும்பாலான எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு செய்துவிட்டன. அதிமுக நடுநிலை வகித்தது.

மத்திய அரசு தொடர்ந்து அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டதாகவும், ராணுத்துக்கு ஆயுதங்கள்வாங்கியதில் பல கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாகவும் கூறி இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதன் மீது கடந்த இரு நாட்களாக காரசாரமான விவாதம் நடந்தது. இதற்கு பதிலளித்து இரவு 11 மணிக்குவாஜ்பாய் பேசினார். இதன் பிறகு எதிர்க் கட்சிகளின் வெளிநடப்புககு மத்தியில் ஓட்டெடுப்பு நடந்தது. இதில்தீர்மானம் தோற்றது.

இத் தீர்மானத்தின் மீது பேசிய திமுக அமைச்சர் டி.ஆர். பாலு மத்திய அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.

அவர் பேசியதாவது:2,500 ஆண்டு பழமை வாய்ந்த மொழி தமிழ். கலாச்சார வளமும் செறிவும் கொண்டது. இதைசெம்மொழியாக அறிவிக்கக் கோரி திமுக தலைவர் கருணாநிதி பலமுறை கோரிக்கை வைத்த்தும் அதை அரசுகண்டு கொள்ளவில்லை. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்துடன் அதை மத்தியில் ஆட்சி மொழியாகவும் சேர்க்கவேண்டும்.

இந்த விஷயத்தில் பிரதமர் வாஜ்பாய்க்கு கருணாநிதி பலமுறை கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துவிட்டார்.

சுதந்திர தினத்தன்று கைதிகளுக்குக் கூட சலுகைகள் தரப்படும். தண்டனை குறைக்கப்படுவதும் உண்டு. ஆனால்,அந்த தினத்தைத் தேர்வு செய்து கருணாநிதி உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் வழக்குப்போடுகிறது ஜெயலலிதா அரசு.

அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் விவகாரம் தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கில் மத்திய அரசும் தன்னை இணைத்துக்கொண்டு ஊழியர்களுக்காக வாதாட வேண்டும் என்று கருணாநிதி கோரினார். அதையும் இந்த அரசுநிறைவேற்றவில்லை. இது திமுகவினரை மன வருத்ததில் ஆழ்த்திவிட்டது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நக்கீரன் ஆசிரியர் கோபால் ஆகியோர் பொடா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் கொடுமையை அனுபவித்து வருகிறார்கள். இதிலும் மத்திய அரசின் செயல்பாடு திருப்திதரவில்லை.

சட்டத்தை அமல்படுத்தி, சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் அதை மீறும்போது அதைத்தடுப்பதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டியது மத்திய அரசின் கடமை.

எந்தக் கூட்டணியில் இருந்தாலும் திமுக எப்போதுமே நம்பந்தகுந்த கட்சியாகவே இருந்து வந்துள்ளது. நட்புஎன்பது வெறும் விளையாட்டுக்கு அல்ல. இதை நண்பர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவே சொல்லிக் கொள்கிறேன்.

தலித்கள், சிறுபான்மையினருக்கு எதிரான எந்தச் செயலையும் கருணாநிதி ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பதையும்நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் அதை கருணாநிதிஎதிர்ப்பார்.

அயோத்தி பிரச்சனையில் எந்தச் சட்டத்தையும் ஆதரிக்க மாட்டோம். நீதிமன்றம் சொல்லும் தீர்ப்பை அனைத்துத்தரப்பினரும் ஏற்க வேண்டும் என்பதே திமுகவின் நிலை.

இவ்வாறு டி.ஆர். பாலு கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+