கர்நாடகத்துடன் நதி நீர் மோதல்: ஜெவை சந்திக்கிறார் நாயுடு

Subscribe to Oneindia Tamil

திருப்பதி:

கர்நாடகத்துடனான நதி நீர் பிரச்சனை குறித்து தமிழகத்துடன் இணைந்து போராடுவது குறித்து ஆலோசிக்கமுதல்வர் ஜெயலலிதாவை விரைவில் சந்திக்க உள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

தனது சொந்த ஊரான சித்தூரில் இருந்து திருப்பதிக்கு சென்ற அவர் ரயிலில் நிருபர்களிடம் பேசியதாவது:

தமிழகமும் ஆந்திரமும் இணைந்து கர்நாடத்துடன் போராட வேண்டும் என்ற எனது கோரிக்கை குறித்து இதுவரைஜெயலலிதாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

விதிகளை மீறி ஆறுகளின் குறுக்கே தனது இஷ்டத்துக்கு அணைகளைக் கட்டி வைத்துக் கொண்டு ஆந்திராவுக்கும்தமிழகத்துக்கும் தண்ணீர் தர மறுத்து வருகிறது கர்நாடகம். நமக்கு உரிமையான நீரை நாம் பெற்றே ஆகவேண்டும்.

இதற்காக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசவுள்ளேன் என்றார்.

கூட்டாக குரல் கொடுத்த அதிமுக, திமுக:

இதற்கிடையே மக்களவையில் அதிமுக மற்றும் திமுக எம்.பிக்கள் காவிரி விவகாரத்தைக் கிளப்பினர்.

வறட்சி காலத்தில் நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக காவிரி நிபுணர் கமிட்டி செய்து வரும் ஆய்வுகளைகர்நாடகம் சீர் குலைக்கப் பார்ப்பதாக அதிமுக எம்.பிக்கள் குற்றம் சாட்டினர். இந்த விஷயத்தில் மத்திய அரசுகர்நாடகத்துக்கு ஆதரவான நிலையை எடுத்து வருவதாகவும் அதிமுக எம்.பிக்கள் குற்றம் சாட்டினர்.

தமிழகத்துக்கு கழிவு நீரைத் திறந்துவிடுவது மாதிரி தான் காவிரியில் இருந்து எப்போதாவது நீர் வருகிறது.எங்களுக்கு உரிய நீரைத் தருவதே இல்லை, இதனால் தேசிய ஒருமைப்பாட்டுக்கே ஆபத்து நேரலாம் என திமுக,அதிமுக எம்.பிக்கள் கூறினர்.

இந்த நேரத்தில் கர்நாடக காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துவிட்டதால், வழக்கமான அமளிஏற்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+