5 மணி நேரம் வெயிலில் மண்டியிட்ட பெண்
திருச்சி:
திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் அருகே உள்ள வலையபட்டி என்ற கிராமத்தில், ஊர்ப் பஞ்சாயத்தின் முன்கொளுத்தும் வெயிலில், 5 மணி நேரம் மண்டியிட பணிக்கப்பட்டார் ஒரு பெண்.
இதனால் மயங்கி விழுந்த அந்தப் பெண், பின்னர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
வலையபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுகந்தி. இவர் தொலைத் தொடர்புத் துறையில் இளநிலை அதிகாரியாகப்பணியாற்றி வருகிறார். இவருக்கும் ராஜேந்திரன் என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம்நடந்தது.
ராஜேந்திரன் நெய்வேலி அணல் மின் நிலையத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இடையில்ராஜேந்திரன் வெளிநாட்டுக்குச் சென்று திரும்பினார். அப்போது சுகந்திக்கும் பிற ஆண்களுக்கும் தொடர்புஇருப்பதாக சிலர் ராஜேந்திரனிடம் கூறினர்.
இதைத் தொடர்ந்து கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் சில காலம் பிரிந்து வாழ்ந்தனர்.
இந் நிலையில் விவாகரத்து வழங்கக் கோரி நீதிமன்றத்தை நாடினார் சுகந்தி. ஆனால் தனது மனைவி மீது ஊர்ப்பஞ்சாயத்தில் புகார் செய்தார் ராஜேந்திரன்.
இதைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சுகந்திக்கு பஞ்சாயத்துத் தலைவர் உத்தரவிட்டார். ஆனால் அதைநிராகத்தார் சுகந்தி. நீதிமன்றத்தின் உத்தரவைத் தான் மதிப்பேன் என்று கூறிவிட்டார்.
இதைத் தொடர்ந்து அவர் கட்டாயப்படுத்தப்பட்டு பஞ்சாயத்திற்கு வரவழைக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஊர்க்கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதற்காக ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதம் கட்டுவதைத் தவிர்க்க விரும்பினால், பஞ்சாயத்து உறுப்பினர்கள் முன் சுடுமணலில் மண்டியிட வேண்டும்என்றும் உத்தரவிடப்பட்டது. இதை ஏற்க மறுத்தார் சுகந்தி. ஆனால் ஊர்க்காரர்களின் கட்டாயம் காரணமாக,கொளுத்தும் வெயிலில் அவர் மண்டியிட்டார்.
காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை அவர் மண்டியிட்டிருந்தார். அப்போது தாகம் ஏற்பட்டு தவித்துள்ளார்.அப்போது தண்ணீர் தரவும் பஞ்சாயத்துத் தலைவர் தடை விதித்துவிட்டார். மயங்கி விழுந்த பின்னர் தான் அவரைவிடுவித்துள்ளனர்.
மயக்கம் தெளிந்த அவர் தட்டுத்தடுமாறி துறையூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் வந்து சேர்ந்தார். அங்குதனக்கு நடந்த தொடுமை குறித்து சுகந்தி புகார் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து ராஜேந்திரன் மற்றும் ஊர்ப் பஞ்சாயத்துக்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கணவர் ராஜேந்திரன் தலைமறைவாகி விட்டார். சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர் சேகர், ஒருபட்டதாரி இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
இச் சம்பவத்தையடுத்து அந்த ஊரில் தனக்கு பாதுகாப்பு இருக்காது என்பதால் சுகந்தி தனது தாயாருடன் ஊரைவிட்டு வெளியேறி சென்னைக்கு சென்று விட்டார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications