பெங்களூரில் காணாமல் போன 7 தமிழ் குழந்தைகள் கேரளத்தில் கண்டுபிடிப்பு
பெங்களூர்:
பெங்களூரில் காணாமல் போன 7 பள்ளிக் குழந்தைகளும் கேரளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இத் தகவலைபெங்களூர் நகர துணை போலீஸ் கமிஷ்னர் ஜெயப்பிரகாஷ் நாயக் தெரிவித்தார்.
முன்னதாக இந்தக் குழந்தைகள் சென்னை அருகே நேமம் பகுதியில் உள்ள கல்வி பகவான் கோவிலுக்குப்போயிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து ஒரு போலீஸ் படை அங்கு விரைந்தது.
காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்ட இந்த 7 பேருமே தமிழ்க் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரில் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த தமிழ்த் தம்பதி ராமசாமி- புஷ்பா. இவர்களின் மகள்கள் ராதா(வயது 13), ரேகா (10), செளம்யா (8). இவர்கள் அப் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் படித்துவருகின்றனர்.
இவர்களின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த நிமி என்பவரின் மகள் சுதா (13), மகன் குமார் (10). குப்புசாமி என்பவரின்மகள் அனு அருணா (14), முனிராஜூவின் மகள் தனலட்சுமி (14). இந்த நான்கு குழந்தைகளும் இந்திரா நகரில்உள்ள செயிண்ட் ஆன்னேஸ் பள்ளியில் படித்து வருகின்றனர்,.
வியாழக்கிழமை காலை இவர்கள் அனைவரும் சேர்ந்து பள்ளிக்குப் புறப்பட்டுள்ளனர். ஆனால், இவர்கள்பள்ளிக்கும் செல்லவில்லை. வீடு திரும்பவும் இல்லை. இதனால் இவர்கள் கடத்தப்பட்டதாகக் கருதப்பட்டது.
ஆனால், போலீஸ் விசாரணையில் இன்னொரு விவரம் தெரியவந்தது.
புஷ்பாவின் குடும்பத்தினர் கல்கி பகவானின் தீவிரமான பக்தர்கள். அடிக்கடி குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு இவர் சென்னை அருகே நேமத்தில் உள்ள கல்வி பகவான் ஆலயத்துக்குச் சென்று வருவது வழக்கம்.
இதனால் புஷ்பாவின் 3 குழந்தைகளும் உடன் படிக்கும் மாணவ, மாணவிகளிடம் கல்கி பகவான் குறித்து நிறையபேசுவார்களாம்.
இவர்களுடன் பயிலும் திவ்யா என்ற மாணவி போலீசாரிடம் கூறுகையில், காணாமல் போன ராதா, ரேகாஆகியோர் நாங்கள் நேமத்தில் உள்ள கல்கி பகவான் ஆலயத்துக்கு போகப் போகிறோம் என என்னிடம்கூறினார்கள் என்று தெரிவித்தார்.
இதனால் இந்தக் குழந்தைகள் அங்கு தான் போயிருக்க வேண்டும் என போலீசார் கருதினர். சென்னைபோலீசாருக்குத் தகவல் தெரிவித்துவிட்டு இக் குழந்தைகளைத் தேடி பெஙகளூர் போலீஸ் படை ஒன்றுநேமத்துக்குச் சென்றது. ஆனால், அங்கு குழந்தைகள் குறித்து போலீசாருக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இதனால் தவறான பஸ் அல்லது ரயிலில் ஏறி அக் குழந்தைகள் வேறு எங்கோ சென்றிருக்கலாம் என்று சந்தேகம்ஏற்பட்டது. பெங்களூரில் இருந்து சென்ற வெளியூர் பஸ்களில் போலீசார் விசாரித்தபோது 7 பேர் கொண்டகுழந்தைகள் குழு ஏதும் பஸ்சில் ஏறவே இல்லை என்று தெரியவந்தது.
இதனால் அவர்கள் ரயில் மூலம் தான் சென்றிருக்க வேண்டும் என்று போலீசார் நம்பினார். இதனால் ரயில்நிலையங்களில் இக் குழந்தைகளின் படங்கள் ஒட்டப்பட்டன.
இந் நிலையில் கேரள போலீசார் மூலமாக பெங்களூர் நகர போலீசாருக்கு இக் குழந்தைகள் குறித்து தகவல் வந்துசேர்ந்தது. இவர்கள் அனைவரும் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஹரிபாட் என்ற இடத்தில் இருப்பதாகவும், ஒருகுழந்தையின் உறவினரின் வீட்டில் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.
இவர்கள் எப்படி அங்கு போனார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இக் குழந்தைகளை அழைத்து வரபெற்றோரும், போலீஸ் படையும் ஹரிபாட் விரைந்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications