சென்னையிலும் மெட்ரோ ரயில்: ஜெ. தீவிர ஆலோசனை
சென்னை:
கொல்கத்தா, டெல்லிக்கு அடுத்தபடியாக சென்னை மாநகரிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்துவதுதொடர்பாக டெல்லி மெட்ரோ ரயில் கழக அதிகாரிகளுடன், முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.
அதி நவீன மெட்ரோ ரயில் சேவை ஏற்கனவே கொல்கத்தா நகரில் இயங்கி வந்தது. அதன் பிறகு சமீபத்தில்டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
சாதாரண ரயில்களை விட பாதாள மெட்ரோ ரயில்கள் விரைவாக செல்வதோடு, அதி நவீன வசதிகளுடன்இருப்பதால், பயணிகளை பெருமளவில் ஈர்த்துள்ளது. இதில் முதலீடு செய்ய அன்னிய நாட்டு நிறுவனங்கள்போட்டி போட்டு வருகின்றன.
இதனால் இந்தியாவின் மேலும் சில நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது. இதனைப் பயனபடுத்திக் கொள்ள பல மாநில அரசுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
மும்பை, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில்களை விட ஆலோசனை நடத்தப்பட்டுவருகிறது. இந் நிலையில் சென்னை நகரிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுதிட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக டெல்லி மெட்ரோ ரயில் கழகத்திடம் ஆலோசனை கேட்கப்பட்டது.
இது குறித்து விவாதிக்க டெல்லி மெட்ரோ ரயில் கழக நிர்வாக இயக்குனர் ஸ்ரீதரன் தலைமையிலான அதிகாரிகள்குழு சென்னை வந்தது. முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதிகாரிகளுடன் இக் குழுவினர் தலைமைச் செயலகத்தில்ஆலோசனை நடத்தினர். ஸ்ரீதரன் சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மெட்ரோ ரயில் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தலாம், பயணிகளின் எண்ணிக்கை, தேவாையான நிதியாதாரம்போன்றவை குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் விரிவாக டெல்லி குழுவினர் விவாதித்தனர்.
இறுதியில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற ரூ. 5,500 கோடி செலவு பிடிக்கும் என்று தெரிகிறது.
இத் திட்டம் குறித்து மிகத் தீவிரமாக பரிசீலிக்கப் போவதாக டெல்லி குழுவினரிடம் ஜெயலலிதாஉறுதியளித்துள்ளதாகத் தெரிகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications