விஷ "பெப்சி" குடித்து 2 பேர் பலி
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில், விஷம் கலந்த பெப்சியைக் குடித்த 2 பேர் பரிதாபமாகப்பலியானார்கள்.
காட்டு மன்னார் கோவிலைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. அவரது மகள் அருள் செல்விக்கும், குமரன் என்பவருக்கும்திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வரதட்சணையாக 10 பவுன் நகை போடுவதாக சுந்தரமூர்த்தி ஒப்புக்கொண்டிருந்தார்.
சீர்வரிசை உள்ளிட்ட செலவுகளுக்கு காசு இல்லாமல் திணறிய சுந்தரமூர்த்தி அதுதொடர்பாக பலரையும்அணுகினார். ஆனால், கேட்ட பணம் கிடைக்கவில்லை.
இதனால் மனம் வெறுத்துப் போன சுந்தரமூர்த்தி, மகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். பெப்சிபாட்டிலை வாங்கி வந்த சுந்தரமூர்த்தி அதில் விஷத்தைக் கலந்தார். பின்னர் அவரும், அருள் செல்வியும் அதைக்குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விட்டனர்.
திருமண ஏற்பாடுகள் தொடர்பாக பேசுவதற்காக சுந்தரமூர்த்தியின் அண்ணன் கிருஷ்ணமூர்த்தி, உறவினர்கிருஷ்ணமூர்த்தி, பக்கத்து வீட்டில் வசிக்கும் கெளரி ஆகியோர் சுந்தரமூர்த்தியின் வீட்டுக்கு வந்தனர்.
ஆனால், உள்ளே தந்தையும் மகளும் மயங்கிக் கிடப்பதைப் பார்த்த அவர்கள் இருவரும் தூங்குவதாக நினைத்துஅருகில் இருந்த பெப்சியை எடுத்துக் குடித்துள்ளனர்.
சிறிது நேரத்தில் அவர்களும் மயங்கி விழுந்தனர்.
5 பேரும் மயங்கிக் கிடப்பதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அனைவரையும் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு இரண்டு கிருஷ்ணமூர்த்திகளும் இறந்தனர். மற்ற 3 பேரும் உயிருக்குப் போராடிக்கொண்டுள்ளனர்.


