“ஹார்ட்பீட் 3 பற்றி மவுனம் உடைத்த தீபா பாலு… ரீனா சொன்ன தகவலால் ரசிகர்கள் எக்சைட்மென்ட்!”

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓடிடி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற தமிழ் வெப் சீரிஸ்களில் முக்கியமான ஒன்றாக மாறியிருப்பது ஹார்ட்பீட். ஹாஸ்பிடல் பின்னணியில் உருவான இந்த சீரிஸ், காதல், நட்பு, உணர்ச்சி, மருத்துவத் துறையின் அழுத்தம் என பல அம்சங்களை கலந்த கதை சொல்லியதால் ரசிகர்களை எளிதாக கவர்ந்தது. குறிப்பாக முதல் சீசன் வெற்றியைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது சீசனும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது ரசிகர்களின் ஒரே கேள்வி - "ஹார்ட்பீட் 3 எப்போது?" என்பதுதான்.

இந்த எதிர்பார்ப்புக்கு நடுவில், தொடரில் ரீனா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை தீபா பாலு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு தற்போது ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.

Heartbeat Deepa Balu Web Series OTT Tamil Disney Hotstar

உருக்கமான தீபா பாலு பதிவு

ஹார்ட்பீட் சீசன் 2 வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, படப்பிடிப்பு தளத்தில் எடுத்த சில போட்டோக்களை பகிர்ந்த தீபா பாலு, இந்த தொடரைப் பற்றிய தனது மன உணர்வுகளை பகிர்ந்துள்ளார்.

அதில், முதல் சீசன் வெற்றிக்குப் பிறகு இரண்டாவது சீசன் எப்படி ஏற்றுக்கொள்ளப்படும் என்ற பயம் இருந்ததாகவும், ஆனால் ரசிகர்கள் அதை தங்களுடைய கதையாக ஏற்றுக்கொண்டு மிகப்பெரிய வெற்றியாக்கியதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

தயாரிப்பாளர், இயக்குநர்கள், குழுவினருக்கு நன்றி தெரிவித்த அவர், ரசிகர்களின் அன்பே இந்த வெற்றிக்கான மிகப்பெரிய காரணம் என்றும் கூறியுள்ளார். ஆனால் ரசிகர்களை அதிகம் உற்சாகப்படுத்தியது கடைசியில் அவர் குறிப்பிட்ட ஒரு வரிதான்.

Heartbeat Deepa Balu Web Series OTT Tamil Disney Hotstar

HB 3 அப்டேட் கொடுத்த தீபா பாலு?

"ஹார்ட்பீட் சீசன் 3 பற்றி பலரும் கேட்கிறீர்கள் என்பதை எனக்கு தெரியும். அதிகாரப்பூர்வ தேதி இன்னும் தெரியவில்லை. ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதி... நாங்கள் மிக விரைவில் திரும்பி வருகிறோம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒரு வரியே ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸாக மாறியுள்ளது. "ரீனா மீண்டும் வரப்போறாங்க!", "HB 3 ஷூட்டிங் ஆரம்பமா?", "இது அதிகாரப்பூர்வ ஹிண்ட்டா?" என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஆர்வமாக பதிவிட்டு வருகின்றனர்.

யார் இந்த தீபா பாலு?

சின்னத்திரை மற்றும் டிஜிட்டல் தளங்களில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய நடிகைகளில் ஒருவர் தீபா பாலு. இயல்பான நடிப்பு, எமோஷனலில் அபரிமிதம், பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற முக அழகு போன்றவற்றால் குறுகிய காலத்திலேயே கவனம் பெற்றவர். குறிப்பாக ஹார்ட்பீட்டில் ரீனா கதாபாத்திரமாக அவர் வெளிப்படுத்திய நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ரீனா கதாபாத்திரம் வெறும் துணை கதாபாத்திரமாக இல்லாமல், கதையின் எமோஷனல் மையங்களில் ஒன்றாக மாறியதற்கும் தீபா பாலுவின் நடிப்பே காரணம் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். இந்த சீரியசுக்கு பிறகு சமீபத்தில் வெளியான கொலை சேவல் படத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த படத்தில் அவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

Heartbeat Deepa Balu Web Series OTT Tamil Disney Hotstar

ரசிகர்கள் காத்திருப்பு உச்சம்

இப்போது அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாத நிலையில் கூட, தீபா பாலுவின் இந்த பதிவு ரசிகர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஹார்ட்பீட் 3 குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

ஏற்கனவே இரண்டாவது பாகத்தின் முடிவு யாரும் எதிர்பார்க்காத வகையில் இருந்தது. கடைசியில் ஆக்சிடென்டான ரீனாவுக்கு என்ன ஆனது? அவருக்கு அவருடைய அப்பா யார் என்று தெரிந்து விட்டது இனி கார்த்திக் உடன் ரீனா சேர்வார்களா? கார்த்திக் தனக்கு இருந்த தடையை மீறி ரீனாவுக்கு சிகிச்சை கொடுத்திருக்கிறாரே அதனால் அவருக்கு என்ன ஆகும் கார்த்திக் உடன் ரீனா போனால் அவருடைய அம்மாவின் நிலைப்பாடு எப்படியாக இருக்கும்? என்ற பல கேள்விகள் ரசிகர்களுக்கு இருக்கிறது. இதனாலேயே மூன்றாவது சீசன் குறித்த ஆர்வமும் அளவுக்கு அதிகமாக இருக்கிறது.

இப்படியான நிலையில தீபா பாலு வெளியிட்ட ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு போதுமே... ரசிகர்களின் இதயத் துடிப்பை மீண்டும் வேகப்படுத்த!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+