கோயம்பேடு மார்க்கெட் காய்கறி கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்க திட்டம்
சென்னை:
சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தேங்கும் காய்கறிக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும்திட்டத்திற்கு முதல்வர் ஜெயலலிதா நாளை (திங்கள்கிழமை) அடிக்கல் நாட்டுகிறார்.
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தினசரி ஏராளமான கழிவுகள் தேங்குகின்றன. இந்தக் கழிவுப் பொருட்களைஅழுக வைத்து அதிலிருந்து வெளியேறும் வாயுவைக் கொண்டு மின்சாரம் தயாரிக்க முடியும் என்று ஆய்வின்மூலம் தெரிய வந்தது.
இதையடுத்து இங்கு மின் நிலையம் அமைக்க தமிழக அரசு டிவு செய்தது. மத்திய அரசின் மானியம் ரூ. 3.75மற்றும் மாநில அரசின் பங்காக ரூ. 1.25 என மொத்தம் ரூ. 5 கோடி மதிப்பில் இந்த மின் நிலையம்அமைக்கப்படவுள்ளது.
மின் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடக்கிறது. ஒரு வருடத்தில் மின் நிலையக்கட்டுமானப் பணிகள் முடிந்து, மின்சாரம் தயாரிக்கும் பணி தொடங்கும்.
காய்கறிக் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்திற்கு மாதம் ரூ. 1.25 லட்சம் செலவாகும், வருடத்திற்கு 17லட்சம் யூனிட் மின்சாரத்தைத் தயாரிக்க முடியும். இதை அங்குள்ள காய்கறி வியாபாரிகளுக்கே அரசுவிற்கவுள்ளது.
இதே நிகழ்ச்சியின்போது கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள ஆம்னி பஸ்நிலையத்தையும் ஜெயலலிதா திறந்து வைக்கிறார்.












Click it and Unblock the Notifications