முடிந்தது பா.ஜ.கவின் ரத யாத்திரை: இன்று பொதுக் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மேற்கொண்டிருந்த ரத யாத்திரை நேற்றுடன் முடிவடைந்தது.இதைத் தொடர்ந்து இன்று அகில இந்தியத் தலைவர் வெங்கையா நாயு டுதலைமையில் சென்னையில் பொதுக்கூட்டம் நிடைபெறவுள்ளது.
தமிழக பா.ஜ.க. தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், 2 மாதங்களுக்கு முன் கன்னியாகுமரியிலிருந்து ரதயாத்திரையைத் தொடங்கினார்.
தமிழகத்தின் முக்கிய நகரங்கள் வழியாக வந்த ரத யாத்திரை கோவைக்கு வந்தபோது, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசினார். தற்போது ரத யாத்திரை சென்னைக்கு வந்துள்ளது. இத்துடன் ரத யாத்திரைமுடிவடைந்தது.
இன்று மாலை சைதாப்பேட்டையில், பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications