அரசியல் கூட்டணி: பொதுக் குழுவில் முக்கிய முடிவெடுக்கப்படும்- கருணாநிதி
மதுரை:
அனைத்து விலங்குகளையும் வதை செய்வதைத் தடுக்க சட்டம் கொண்டு வந்தால் அதை திமுக ஆதரிக்கும்,ஆனால், அப்படிப்பட்ட சட்டத்தைக் கொண்டு வருவோம் என பா.ஜ.க. உறுதியளிக்குமா என்று திமுக தலைவர்கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பொடா சட்டத்தை முழுமையாக வாபஸ் பெற வேண்டும்என்று நாங்கள் கூறி வருகிறோம். அந்த நிலையிலிருந்து நாங்கள் பின் வாங்கவில்லை. பின் வாங்க மாட்டோம்.பொடாவை எதிர்த்து தீவிரப் போராட்டம் நடத்தப்படும்.
பொடா சட்டத்தின் கீழ் வைகோ உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு 400 நாட்களுக்கும் மேலாகி விட்டது.அவர்களை விடுதலை செய்யக் கோரி ஜனநாயகரீதியில் போராட்டம் நடத்தப்படும். விழுப்புரத்தில் நடக்கும்திமுக பொதுக் கூட்டத்துக்குப் பின் கட்சியின் செயற்குழுவும் பொதுக் குழுவும் கூடும்.
அதில் பொடாவுக்கு எதிராக அடுத்து என்ன செய்வது என்பதை ஆராய்வோம். அதில் நாடாளுமன்றத் தேர்தல்குறித்தும், கூட்டணிகள் குறித்தும் விவாதித்து முடிவெடுக்கப்படும். அதிமுகவைத் தோற்கடிக்கும் வகையில் எங்கள்அணி அமையும்.
பசு வதையை மட்டும் தடுக்க சட்டம் கொண்டு வந்தால் அதை ஆதரிக்க முடியாது. இது சிறுபான்மையினருக்குஎதிராகக் கொண்டு வரப்படும் சட்டமாகவே கருத முடியும்.
அனைத்து விலங்குகளையும் வதை செய்வதை தடுக்க சட்டம் கொண்டு வந்தால் அதை திமுக ஆதரிக்குமா என்றுபாஜக கேட்கிறது. அதை திமுக நிச்சயம் ஆதரிக்கும்.
அதேசமயம், அனைத்து விலங்குகளையும் வதை செய்யும் சட்டம் கொண்டு வருவோம் என்று பா.ஜ.க.உறுதியளிக்குமா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் முதலில் அப்படிப்பட்ட உறுதிமொழியைத் தரட்டும்.
ராமேஸ்வரத்திற்கும், தலைமன்னாருக்கும் இடையே தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைதேவையற்றது, இந்தப் பாலம் தேவையில்லாதது.
இந்த ஆண்டும் அதிமுக ஆட்சியின் புண்ணியத்தில் குறுவை சாகுபடியை தஞ்சை விவசாயிகள் இவந்துவிட்டனர்என்றார் அவர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications