மழை நீர் வடிகால்: காலக்கெடு நீட்டிக்கப்படாது
விருதுநகர்:
மழை நீர் வடிகால் வசதியை ஏற்படுத்த கட்டட உரிமையாளர்களுக்குத் தரப்பட்டுள்ள கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார்.
விருதுநகரில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வீடுகள், கட்டடங்களில் மழை நீர் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும். இந்த வடிகால்வசதி அமைக்கும் பணி, சில மாவட்டங்களில் முழு வீச்சில் நடந்து வருகிறது. ஆனால், நெல்லை போன்ற சிலமாவட்டங்களில் இன்னும் பாதியளவு கூட நடந்து முடியவில்லை.
மழை நீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதில் கோவை மாவட்டம்தான் முன்னணியில் உள்ளது. விருதுநகர்,திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மொத்தம் உள்ள 3.76 லட்சம் வீடுகள் மற்றும்கட்டடங்களில் 2.08 லட்சம் கட்டடங்களில்தான் மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்தபட்டுள்ளது.
இந்தப் பணியை முடிக்க காலக்கெடு நீட்டிக்கப்படாது. இதைச் செய்யாதவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை வரும்என்றார்.


