பா.ஜ.க. ஆதரவு வாபஸ்: உ.பி சட்டசபையை கலைக்க கோருகிறார் மாயாவதி
லக்னெள:
பா.ஜ.கவுடன் கூட்டு சேர்ந்து உத்தரப் பிரதேசத்தில் ஆட்சி நடத்தி வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முதல்வர்மாயாவதி, இன்று காலை ஆளுநரைச் சந்தித்து சட்டசபையைக் கலைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
ஆனால், மாயாவதிக்கு முன்னதாக ஆளுநரைச் சந்தித்த பா.ஜ.க. தலைவர்க, அரசுக்குத் தந்து வரும் ஆதரவைவாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
இதனால் மாயாவதியின் ஆட்சி கவிழும் சூழல் உருவாகியுள்ளது. அதே நேரத்தில் சட்டசபையை ஆளுநர் கலைக்கமுன் வர மாட்டார் என்று தெரிகிறது. இதனால் மாயாவதியின் கட்சியை உடைத்து ஆட்சியைப் பிடிக்கும்வேலையில் பா.ஜ.க. இறங்கும் என்று தெரிகிறது.
நேற்று தனது அரசு இல்லத்தில் இருந்து பொருட்களை எல்லாம் சொந்த வீட்டுக்கு இடம் மாற்றிவிட்ட மாயாவதி,முக்கிய பைல்களையும் கொண்டு சென்றுவிட்டார். இன்று காலை தனது அமைச்சரவையைக் கூட்டிய மாயாவதி ,தான் பதவி விலகப் போவதாகக் கூறிவிட்டு ஆளுநர் விஷ்ணுகாந்த் சாஸ்திரியை சந்திக்கச் சென்றார்.
இதையடுத்து மாயாவதி அரசின் பா.ஜ.க. அமைச்சர்கள் தனியே சந்தித்துப் பேசிவிட்டு ஆளுநரிடம் விரைந்தனர்.மாயாவதிக்கு முன்னதாகவே ஆளுநரைச் சந்தித்து ஆட்சிக்குத் தந்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாகஅறிவித்தனர். அதே நேரத்தில் சட்டசபையைக் கலைக்க வேண்டாம் என வலியுறுத்தினர்.
பா.ஜ.கவினர் இதைச் செய்வார்கள் என்பதை எதிர்பார்த்த மாயாவதி, தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை.சட்டசபையைக் கலைக்கும் வரை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று அவர் நிருபர்களிடம்கூறினார். சட்டசபையைக் கலைக்க அமைச்சரவை எனக்கு முழு ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.
ஆனால், பா.ஜ.க. மாநிலத் தலைவர் வினய் கட்யார் இதை மறுத்தார். பா.ஜ.க. அமைச்சர்கள் யாரும் சட்டசபைகலைப்புக்கு ஆதரவு தரவில்லை. ஒரு தலைப்பட்சமாக மாயாவதியே இந்த முடிவை எடுத்துள்ளார் என்றார்.
மாயாவதியை சந்தித்த பின்னர் நிருபர்களிடம் பேசிய ஆளுநர் விஷ்ணுகாந்த் சாஸ்திரி, இந்த விவகாரத்தில்சரியான நடவடிக்கையை உரிய நேரத்தில் எடுப்பேன் என்றார். மத்திய பா.ஜ.க தலைவர்களுக்கு சாஸ்திரி மிகநெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சட்டசபையைக் கலைக்க அவர் அனுமதிப்பாரா என்றுதெரியவில்லை.
இந்தக் கூட்டணி ஆட்சி அமைந்து முதலே மாயாவதிக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே உரசலும் தொடர்ந்துகொண்டிருந்தது.
இதற்கிடையே ஆக்ராவில் தாஜ்மகாலுக்கு அருகே, சட்ட விரோதமாக, ரூ. 175 கோடியில் வர்த்தக நகரைஉருவாக்க அனுமதி தரப்பட்ட விவகாரத்தில் மத்திய பா.ஜ.க. அரசுக்கும் மாயாவதிக்கும் இடையே மோதல்ஏற்பட்டது.இத் திட்டத்தில் பல கோடி அளவுக்கு லஞ்சம் கைமாறியுள்ளதாகவும் தெரிகிறது. இதை மாயாவதிவாங்கியதாக பா.ஜகவும் பா.ஜ.கவினர் வாங்கியதாக மாயாவதி தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந் நிலையில் மாயாவதிக்கு மிக நெருக்கமான மாநில சுற்றுச்சூழல்துறை அமைச்சர் நசீமுதீன் சித்திக்கை நேற்றுமாலை முதல் ரகசிய இடத்தில் வைத்து சிபிஐ விசாரித்து வருகிறது. அடுத்தபடியாக மாயாவதி மீதே சிபிஐ பாயும்என்று தெரிகிறது.
உ.பியில் அடுத்து ஆட்சியமைக்க எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை இல்லை. காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சிஅமைக்க முலாயம் சிங் அனுமதி கோருவார். அதே நேரத்தில் மாயாவதி கட்சியை உடைத்து ஆட்சியைப் பிடிக்கும்வேலையை பா.ஜ.கவும் ஆரம்பித்துவிட்டது.
இதைத் தவிர்க்கவே சட்டசபையை கலைக்க கோரியுள்ளார் மாயாவதி.
ஆளுநர் விஷ்ணுகாந்த் சாஸ்திரி எடுக்கும் முடிவுகளைப் பொறுத்தே எதுவும் நடக்கும்.












Click it and Unblock the Notifications