பொடாவின் தேவை உறுதியாகிவிட்டது: கூறுகிறார் வெங்கையா
சென்னை:
மும்பையில் நடந்துள்ள குண்டு வெடிப்புச் சம்பவத்தைப் பார்க்கும்போது, பொடா சட்டம் கண்டிப்பாக தேவைஎன்பது உறுதியாகிறது என பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் ராதாகிருஷ்ணன் மேற்கொண்ட ரத யாத்திரையின் நிறைவையொட்டி சென்னையில்நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,
மும்பை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 50 பேர் வரை இறந்துள்ளனர். பாகிஸ்தான் மீண்டும் தனது கைவரிசையைக்காட்டி விட்டது. தீவிரவாதத்தை கடுமையாக ஒடுக்க பொடா போன்ற சட்டங்கள் தேவை என்பதையே இந்தசம்பவம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
செப்டம்பர் 11ம் தேதி நடந்த சம்பவத்திற்குப் பிறகுதான் தீவிரவாதம் என்றால் என்ன என்பதை அமெரிக்காஉணர்ந்தது. தீவிரவாதம் குறித்து இந்தியா பலமுறை எடுத்துக் கூறி வந்தபோதிலும் அதைக் கண்டுகொள்ளாமல்இருந்த அமெரிக்கா, செப்டம்பர் 11க்குப் பிறகு அதன் தாக்கத்தை உணர்ந்தது.
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு தொடர்ந்து இந்தியாவில் தீவிரவாதத்தை வளர்த்து வருகிறது. அதன்செயல்பாடுகளில் ஒன்றுதான் மும்பை குண்டு வெடிப்புச் சம்பவம். நாட்டை சீர்குலைக்க ஐ.எஸ்.ஐ. நடத்தும்தீவிரவாதச் செயல்கள் வெற்றி பெறாது.
நாட்டு மக்கள் அனைவரும் இந்த நேரத்தில் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.
அல் உம்மா, சிமி என முஸ்லீம் இயக்கங்களை மட்டுமே நாங்கள் தடை செய்யவில்லை. விடுதலைப் புலிகள்,பி.டபிள்யூ.ஜி என முஸ்லீம் அல்லாத பயங்கரவாத அமைப்புகளையும் தடை செய்துள்ளோம்.
எனவே முஸ்லீம் மக்களை குறி வைத்து நாங்கள் செயல்படுவதாக கூறுவதை ஏற்க முடியாது என்றார் நாயுடு.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications