மழை நீர் சேமிப்பு வடிகால் அமைக்காவிட்டால் குடிநீர் இணைப்பு கட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் மழை நீர் சேமிப்புக்கான வடிகால் வசதியை ஏற்படுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்புஅல்லது மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் என்று ஊராட்சித் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் எச்சரித்துள்ளார்

கடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால் வசதிகள் குறித்து பார்வையிட சென்ற சம்பத் பின்னர்வீடு வீடாக சென்று மழை நீர் வடிகால் முறையின் நன்மைகள் குறித்து பொது மக்களிடம் எடுத்துரைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மழை நீரை சேமிக்க வடிகால் வசதியை ஏற்படுத்த வரும் 31ம்தேதிதான் கடைசி நாள். அதன் பிறகு கால நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது. 31ம் தேதிக்குள் இந்த வசதியைஏற்படுத்தாத வீடுகள், கட்டடங்களின் குடிநீர் இணைப்பு அல்லது மின்சார இணைப்பு நிச்சயம் துண்டிக்கப்படும்.

தமிழகம் முழுவதிலும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 65 சதவீத கட்டடங்களில் மழை நீர்வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை நகல் சுமார் 1.70 லட்சம் வீடுகளில் மழை நீர் வடிகால் வசதிசெய்யப்பட்டு விட்டது.

சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களிலும் மழை நீர் சேமிப்புக்கு வடிகால் வசதி செய்யதிட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

சிறுவர்கள் ஸ்கேட்டிங் பிரசாரம்:

இதற்கிடையே திருச்சியில் 30க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் ஸ்கேட்டிங் மூலம் ஒவ்வொரு பகுதியாகச் சென்று,மழை நீர் வடிகால் குறித்து விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொண்டனர்.

திருச்சி மாநகராட்சி அலுவலகத்திலிருந்து இந்த விழிப்புணர்வுப் பிரசாரம் தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகள்வழியாக இந்த சிறுவர், சிறுமியர் சென்றனர். 4 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமியர் இதில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+