அயோத்தி: சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் இருந்தது- தொல்பொருள் துறை ஆய்வில் முடிவு

Subscribe to Oneindia Tamil

லக்னெள:

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், அந்த இடத்தில் முன்புகோவில் இருந்தற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக தொல்பொருள் துறை தெரிவித்துள்ளது.

ஆனால், மத்திய பா.ஜ.க. அரசின் நெருக்கடிகளுக்குப் பணிந்து தொல்பொருள் துறையால் உருவாக்கப்பட்டஆய்வறிக்கை இது என மத்திய இஸ்லாமிய வக்பு வாரியம் கூறியுள்ளது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தின் கீழே கோவில் இருந்ததா என்பது குறித்து அகழ்வாராய்ச்சி நடத்த மத்தியதொல்பொருள் துறைக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து கடந்த 160 நாட்களாக அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடந்தன. இந்த இடத்தில்கண்டெடுக்கப்பட்ட பொருள்கள், வரைபடங்கள் அடங்கிய ஒரு பெட்டியும், ஆய்வு விவரங்கள் அடங்கியஅறிக்கைகள் கொண்ட இன்னொரு பெட்டியும் இந்த நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த 574 பக்க ஆய்வறிக்கை இன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில்விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த அறிக்கையில், சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் இருந்ததற்கான தடங்கள் இருப்பதாக நீதிமன்றத்திடம்தொல்பொருள் ஆய்வுத் துறை தெரிவித்துள்ளதுவட இந்திய கட்டக் கலையுடன் கூடிய ஒரு புராதனமான கோவில் அந்த இடத்தில் இருந்தது எனவும் அந்தக்கோவிலின் இடிபாடுகளில் சில அகழ்வாராய்ச்சியின்போது கிடைத்ததாகவும் தொல்பொருள் துறை கூறியுள்ளது.

அது 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலாக இருக்கலாம் எனவும், மசூதி இருந்த இடத்தில் தோண்டப்பட்டபோதுகிடைத்த சில கட்டமைப்புகளைப் பார்த்தால் அது கோவிலின் உள் பகுதி போலத் தெரிவதாகவும் அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த ஆய்வறிக்கையில் எந்த விவரமும் இல்லை எனவும், மிகவும் முரண்பாடானதாக இருப்பதாகவும்,அரசியல் நெருக்குதலால் இது எழுதப்பட்டது போல இருப்பதாகவும் இஸ்லாமிய வக்பு வாரியத்தின் வழக்கறிஞர்தெரிவித்தார்.

அவர் கூறுகையில், 50 மீட்டருக்குக் கீழே மிகப் பெரிய கோவில் இருப்பது தெரிய வருவதாக தொல்பொருள்ஆய்வுத்துறை கூறியுள்ளது. ஆனால், அவ்வளவு ஆழத்துக்கு அவர்கள் தோண்டவே இல்லையே. அப்படிஇருக்கையில் எதை வைத்து கோவில் இருப்பதாக சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்த ஆய்வறிக்கையைதெளிவாக படித்து முடித்து பதில் மனு தாக்கல் செய்ய ஒரு மாத அவகாசம் கோரியுள்ளோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+