தமிழகத்தில் தலைமறைவாக உள்ள 11 தீவிரவாதிகள்: தகவல் தந்தால் ரூ. 2 லட்சம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Terrorists

தமிழகத்தில் தலைமறைவாக உள்ள 11 தீவிரவாதிகளைப் பிடிக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இவர்களைப் பற்றிய தகவல் தெரிவித்தால் ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.

அடுத்த மாதம் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடக்கும்போது, மும்பையில் நடந்ததைப் போலவேதமிழகத்திலும், குறிப்பாக சென்னையில், தொடர் குண்டுகளை வெடிக்கச் செய்ய இக் கும்பல் திட்டமிட்டுள்ளதாகவந்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த இரு நாட்களாக உயர் மட்ட அதிகாரிகளின் கூட்டம் சென்னையில் நடந்து வருகிறது. மாநகரபோலீஸ் கமிஷ்னர் விஜயகுமார் தலைமையில் இணை, துணை, உதவி கமிஷ்னர்கள், இன்ஸ்பெக்டர்கள் இக்கூட்டங்களில் பங்கேற்றனர்.

அப்போது தலைமறைவாக உள்ள தீவிரவாதிகள் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவும், அவர்களைப்பிடிக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

நகரின் அனைத்துப் பொது இடங்களிலும் உளவுப் பிரிவினரின் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும் விடுதிகள், மேன்சன்களில் அதிரடி சோதனைகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வாடகைக்கு புதிதாக யாரையாவது குடி வைக்கும்போது ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் அது குறித்து காவல்நிலையத்தில் தெரிவிக்குமாறும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் தலைமறைவாக உள்ள தீவிரவாதிகள் 11 பேரின் விவரங்கள், புகைப்படங்களை (7 பேரின் படங்கள்மட்டுமே போலீசாரிடம் உள்ளன) பொது இடங்களில் ஒட்டி வைக்கவும் கமிஷ்னர் உத்தரவிட்டுள்ளார்.இவர்களைப் பற்றிய தகவல் தந்தால் ரூ. 2 லட்சம் தரப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

தேடப்படும் இந்தத் தீவிரவாதிகளின் பெயர், ஊர் விவரம்:

1. சாதிக் ராஜா என்ற டெய்லர் ராஜா: சொந்த ஊர் கோவை.

2. அபுபக்கர் சித்திக்- கோவை

3. முஜிபுர் ரஹ்மான்- கோவை

4. அயூப் என்ற அஷ்ரப் அலி- கோவை

5. என்ஜினியர் ஹைதர் அலி- கோவை

6. முஷ்தாஹ் அஹமத்- வாணியம்பாடி

7. மன்சூர் என்ற யூனுஸ் என்ற முகம்மத் அலி- மேலப்பாளையம்

8. ரசூல் மைதீன்- மேலப்பாளையம்

9. முகைதீன்- மேலப்பாளையம்

10. நுகு- கேரளா

11. குஞ்சு முகம்மது- கேரளா

இவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால்,

(044) 28555069, 28555045, 28555036, 28555078 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டுதெரிவிக்கலாம்.

இவர்கள் மீது கோவை, சென்னையில் குண்டுகள் வைத்தது, ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தை தகர்த்த வழக்குகள்,கொலை வழக்குகள் ஆகியவை நிலுவையில் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+