மழை நீர் வடிகால் திட்டத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
சென்னை:
தமிழக அரசின் மழை நீர் மேசிப்பு வடிகால் சட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
வீடுகள், கட்டடங்களில் வரும் 31ம் தேதிக்குள் மழை நீர் வடிகால் வசதிய ஏற்படுத்த வேண்டும் என்றும்இல்லாவிட்டால், மின் இணைப்பு அல்லது குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று தமிழக அரசுஅறிவித்துள்ளது.
இதை எதிர்த்து வாய்ஸ் என்ற நுகர்வோர் அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஜயன்பொது நல வழக்குத் தொடர்ந்தார். மழை நீர் சேமிப்புக்கும், குடிநீர் இணைப்புக்கும் இடையே முடிச்சைப் போட்டுமக்களின் குரல் வளையை நெரிக்கும் செயலில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
எனவே தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். முதல் கட்டமாக இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும் என்றார்.
அரசுத் தலைமை வழக்கறிஞர் என்.ஆர்.சந்திரன் வாதிடுகையில், அதிகம் செலவாகிறது என்ற ஒரே காரணத்திற்காகஇந்த நல்ல திட்டத்தை தடை செய்யக் கூடாது.
ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் மழை நீர் வடிகால் வசதியை ஏற்படுத்த முடியாதவர்கள், சம்பந்தப்பட்ட அரசுஅலுவலகங்களை அணுகினால், அரசு சார்பில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு அதற்குரிய தொகை பினனர்வசூலிக்கப்படும்.
ஆகஸ்ட் 31ம் தேதிக்குப் பிறகு உடனடியாக மின் இணைப்பும் குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும் என்று அரசுகூறவில்லை. அக்டோபர் 10ம் தேதிக்குப் பிறகுதான் அந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஜூலை 19ம் தேதியே சட்டம் பிறப்பிக்கப்பட்டுவிட்டது. அதை அமலாக்க பொது மக்களுக்கு போதுமானகால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. டிவி, செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
இதையடுத்து வழக்கைப் பரிசீலித்த உயர்நீதிமன்ற முதல் பெஞ்ச் திட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது.
தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி குலசேகரன் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் கூறியதாவது:
இந்தத் திட்டம் மிகச் சிறப்பானது. தற்போது கடும் தண்ணீர் பற்றாக்குரை நிலவும் நேரத்தில் இது போன்ற திட்டத்தைஅறிமுகப்படுத்தியதற்காக அரசுக்குப் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம்.
அரசின் முயற்சிகள் நல்ல நோக்கத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. எனவே திட்டத்திற்கு இடைக்காலதடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை. அடுத்த கட்ட விசாரணை 2 வாரங்களுக்குப் பிறகு நடக்கும் என்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications