உரிய அனுமதியில்லாமல் கருணாநிதியை விசாரிக்க வந்த போலீஸ் படை: திருப்பி அனுப்பப்பட்டது
சென்னை:
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை போராட்டம் செய்யத் தூண்டியதாக எஸ்டா சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்குத் தொடர்பாக விசாரிக்க குற்றப் பிரிவு போலீசார் திமுக தலைவர் கருணாநிதியிடம்விசாரணை நடத்தச் சென்று, முடியாமல் திரும்பினர்.
கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு திடீரென போலீஸ் படை சென்றது. உதவி கமிஷ்னர் லட்சுமிநாதன்தலைமையில் அந்தப் படை சென்றது. அவர்களை கருணாநிதியின் கமாண்டோ படையினர் தடுத்தனர்.
அவர்களிடம் விசாரணை குறித்த விவரங்களை போலீசார் விளக்கினர். இதையடுத்து கருணாநிதியின்உதவியார்களிடம் பேசுமாறு போலீசாரிடம் கமாண்டோ படையினர் கூறினர்.
இதைத் தொடர்ந்து கருணாநிதியைச் சந்திக்க வேண்டும், அவரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது எனஉதவியாளர் மூலம் போலீசார் சொல்லி அனுப்பினர்.
ஆனால், முறையான அனுமதி இல்லாமல், அப்பாயின்மெண்ட்டும் இல்லாம் திடீரென வந்தால் விசாரணைக்குஒப்புக் கொள்ள முடியாது என கருணாநிதியின் உதவியாளர் போலீசாரிடம் கூறிவிட்டார்.
இதையடுத்து கருணாநிதியின் அனுமதியில்லாமல் அவரை விசாரிக்க அனுமதிக்க முடியாது என கமாண்டோப்படையும் கூறிவிட்டதால் போலீசார் திரும்பிச் சென்றுவிட்டனர்.
மத்திய கமாண்டோ படையின் பாதுகாப்பின் கீழ் இருப்பவர்களிடம் விசாரணை நடத்த மத்திய அரசிடமோஅல்லது நீதிமன்றத்திடமோ போலீசார் முறையான அனுமதி வாங்கிவிட்டுத் தான் வர வேண்டும் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications