போலீஸை தாக்கிய வழக்கு: மதானியின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
கோவை:
போலீஸ் இன்ஸ்பெக்டரைத் தாக்கிய வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையை எதிர்த்துகேரளாவின் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுமீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோவை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகளில் மதானியும் ஒருவர். இவர்கள் மீதானவழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 1998ம் ஆண்டு மே 6ம் தேதி நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படும்போது, இன்ஸ்பெக்டர் ஜேக்கப்என்பவரைத் தாக்கினார் மதானி. இது தொடர்பாக அவர் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த 3-வது குற்றவியல் நடுவர் மன்றம், கடந்த 2001ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி, மதானிக்கு2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து மதானி தரப்பில் முதலாவது விரைவு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. தற்போதுஇதில் விசாரணை முடிவடைந்துவிட்டது. ஆனால், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications