கால கெடுவை நீட்டிக்க முடியாது: ஜெ. திட்டவட்டம்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

தமிழத்தில் அனைத்துக் கட்டடங்கள், வீடுகளில் மழை நீர் சேமிப்பு வடிகால் வசதியை ஏற்படுத்த ஆகஸ்ட் 31ம்தேதிதான் கடைசி நாள். அதற்குப் பிறகும் காலக் கெடுவை நீட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளார்.

தமிழகத்தின் உள்ள அனைத்துக் கட்டடங்களிலும் மழை நீர் சேமிப்பு வசதியை உடனடியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்ற உத்தரவையடுத்து மாநிலத்தின் குழாய்கள், சிமெண்ட், ஜல்லி ஆகியவற்றின் விலை கடுமையாகஉயர்ந்துள்ளது.

மேலும் தங்களது கூலியையும் கொத்தனார்கள் உயர்த்திக் கொண்டுள்ளனர். இதனால் கட்டட உரிமையாளர்கள்விழி பிதுங்கிப் போய் உள்ளனர். திடீரென ஆயிரக்கணக்கில் செலவிட முடியாத நிலையில் உள்ளவர்கள் கலங்கிப்போய் உள்ளனர்.

இந் நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா பேசுகையில்,

மழை நீர் சேமிப்பு வடிகால் திட்டத்தை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக உள்ளது. மழை நீர் வடிகால் வசதியைஏற்படுத்துமாறு பல்வேறு வழிகளில் அரசு பிரசாரம் செய்து வருகிறது.

மழை நீர் சேமிப்பு வசதியை ஏற்படுத்துவதற்கு போதுமான கால அவகாசம் கொடுக்கப்பட்டு விட்டது. தேவையானவழிமுறைகளும் கூறப்பட்டு விட்டன.

எனவே, ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் மழை நீர் சேமிப்பு வடிகால் வசதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்குமேலும் காலக் கெடுவை நீட்டிக்க முடியாது. அதற்கான அவசியம் இல்லை.

ஆகஸ்ட் 31க்குள் இந்தப் பணியை முடிக்காத கட்டடங்களில், உள்ளாட்சித் துறையினரே அந்தப் பணியைமுடிப்பார்கள். பின்னர் அதற்கான கட்டணத்தை கட்டட உரிமையாளர்களிடம் வசூலிப்பார்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+