தாமன்: ஆற்றுப் பாலம் உடைந்த விபத்தில் 34 பேர் பலி
தாமன்:
தெற்கு குஜராத் அருகே உள்ள தாமன் யூனியன் பிரதேசத்தில் ஆற்றுப் பாலம் உடைந்து வாகனங்கள் நீரில் விழுந்துமூழ்கியதில் இறந்தவர்கள் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துவிட்டது. இவர்கைளத் தவிர மேலும் 8 பேரைக்காணவில்லை. அவர்களும் இறந்திருக்கலாம் என்று தெரிகிறது.
இறந்தவர்களில் 23 பேர் பள்ளிக் குழந்தைகள் ஆவர். டையூ, தாமன் யூனியன் பிரதேசத்தில் உள்ள தாமன்கங்காஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் நேற்று கடும் மழையில் திடீரென உடைந்து விழுந்தது.
அப்போது அதில் சென்று கொண்டிருந்த ஸ்கூல் வேன், ஆட்டோ உள்ளிட்ட 10 வாகனங்களும், நடந்து சென்றுகொண்டிருந்தவர்களும் ஆற்றுக்குள் விழுந்தனர். மழை காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டுள்ளது.
இதனால் இந்த வாகனங்கள் சுமார் 40 அடி ஆழத்துக்கு நீருக்குள் மூழ்கின.
இநதப் பாலம் 100 ஆண்டு பழமையானதாகும். சமீபத்தில் தான் சில ரிப்பேர் பணிகள் நடந்தன எனபதுகுறிப்பிடத்தக்கது. 325 மீட்டர் நீளமுள்ள இந்த ஒரே பாலம் தான் மோத்தி தாமன் மற்றும் நானி தாமன் ஆகியபகுதிகளுக்கு இடையே உள்ள ஒரே இணைப்பாகும்.
இந்த விபத்தில் மேலும் 25 காயமடைந்தனர். இதில் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
காணாமல் போனவர்களின் உடல்கள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இந்தப்பாலத்தில் இருந்து சற்று தொலைவில் தாமன்கங்கா ஆறு, அரபிக் கடலுடன் சேருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications