நடுத்தர மக்களை ஒழித்துக் கட்ட ஜெ. முடிவு: இளங்கோவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை :

அதிமுக அரசின் போக்கைக் கண்டித்து அனைத்து எதிர்க் கட்சிகளையும் ஒன்று திரட்டி மாநில அளவிலானபோராட்டம் நடத்தப் போவதாக தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பிரிவு மாநாடு தொடர்பான ஆலோசனைக்கூட்டம் சத்தியமுர்த்தி பவனில் இளங்கோவன் தலைமையில் நடந்தது.

கூட்டத்திற்குப் பிறகு இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மின் கட்டணத்தை இந்த அரசுஉயர்த்தியது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்போது கூடுதலாக மின்சாரத்தின் மீதுவரியும் விதித்துள்ளார் ஜெயலலிதா.

இதுதவிர, மாதம் 5,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குவோருக்கு ரேஷன் கடைகளில் ஒரு பொருளும்வழங்கப்பட மாட்டாது என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் நடுத்தர வர்க்க மக்களை ஒழித்துக் கட்டுவது என்றமுடிவுக்கு ஜெயலலிதா வந்துவிட்டதாகத் தெரிகிறது.

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் மக்கள் விரோத முடிவாகவேஉள்ளது. எனவே, இந்த அரசைக் கண்டித்து, அனைத்து எதிர்க் கட்சிகளையும் ஒன்று திரட்டி மாநிலம் தழுவியபோராட்டம் நடத்தப்படும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+