தா.கி. கொலை வழக்கில் ஒருவர் விடுதலை
மதுரை:
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் விடுதலை செய்யப்பட்டார்.
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கு தொடர்பாக அழகிரி உள்ளிட்ட 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் இசக்கிமுத்து என்ற வியாபாரி தேடப்பட்டு வந்தார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.அவர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந் நிலையில் தா.கி. கொலை வழக்கை விசாரித்து வரும் போலீஸ அதிகாரி முருகேசன், மதுரை 6-வது குற்றவியல்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், இசக்கிமுத்து மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்றுதெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து இசக்கிமுத்துவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தச் சொன்ன நீதிபதி வனிதா, அவரை விடுதலைசெய்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள முதல் நபர் இசக்கிமுத்து என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications