கல்வி வியாபாரமாகிவிட்டது: ராமதாஸ் வேதனை
சென்னை:
காமராஜரின் கொள்கைகளை நடைமுறைக்குக் கொண்டு வர பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக பாடுபடும் என்றுஅக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் காமராஜர் நூற்றாண்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய டாக்டர்ராமதாஸ், காமராஜரின் தலைமைத்துவ பண்பால் கவரப்பட்டவன் நான். நாடு முழுவதிலும் கல்வித் துறைக்குப்புத்துயிர் கொடுத்தவர் அவர்.
காமராஜரின் பல்வேறு கனவுகள் இன்னும் கூட நனவாகாமல் உள்ளன. அதை நிறைவேற்றப் பாடுபட வேண்டும்.அதை பாட்டாளி மக்கள் கட்சி செய்யும். நாட்டில் 30 சதவீதத்திற்கும் மேலான மக்கள் இன்னும் வறுமைக்கோட்டிற்குக் கீழேதான் உள்ளனர். கல்வி இன்று வியாபாரமாகி விட்டதுதான் இதற்குக் காரணம்.
காமராஜரின் வாழ்க்கையை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும். அவரது வாழ்வியல்கோட்பாடுகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ஏ.கே.மூர்த்தி, என்.டி.சண்முகம், காமராஜரின் தனி உதவியாளராக இருந்தவைரவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications