அதிமுகவுடன் நெருங்கவில்லை என்கிறார் ராமதாஸ்: திமுகவுக்கு அறிவுரை
சென்னை:
அதிமுகவுடன் நட்பு வைத்துக் கொள்ள பாட்டாளி மக்கள் கட்சி முயற்சி செய்யவில்லை என்று அக் கட்சியின்நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சமீபகாலமாக திமுகவிடம் இருந்து பா.ம.க. விலகி நிற்க ஆரம்பித்துவிட்டது. திமுக-மதிமுக-காங்கிரஸ்-கம்யூனிஸ்டுகள் நடத்திய போராட்டங்களில் பங்கேற்கவில்லை. இதில் பங்கேற்க தங்களுக்கு தனியே அழைப்புவரவில்லை என்று பா.ம.க. கூறியுள்ளது.
இந் நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி உருவானாலும், பா.ம.க. தொடர்ந்துபா.ஜ.க. அணியிலேயே இருக்கும் என்றும், அதிமுக-பா.ஜ.க. கூட்டணி வந்தாலும் தொடர்ந்து அந்த அணியில்இருக்கும் என்றும் தெரிகிறது.
இதனால் அதிமுகவை விமர்சிப்பதையும் ராமதாஸ் வெகுவாகக் குறைத்துக் கொண்டுவிட்டார். அரசு ஊழியர்போராட்டத்தின்போது இது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது. அந்த நேரத்தில் பா.ம.க. தரப்பில் இருந்து ஆழ்ந்தமெளனமே நிலவியது.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ்,
அதிமுகவுடன் நாங்கள் நெருங்கி வருவதாக மாநில அரசின் உளவுத் துறை போலீஸ் மூலம் தவறான தகவல்பரப்பப்பட்டு வருகிறது. கூட்டணி தொடர்பாகவோ, அல்லது நட்பு தொடர்பாகவோ எங்களை அதிமுகவிலிருந்துயாரும் பார்க்கவில்லை என்பதே உண்மை.
அதிமுக அரசின் நல்ல விஷயங்களைப் பாராட்டுகிறோம். அதேசமயத்தில், அரசின் தவறுகளை வெளிச்சம்போட்டுக் காட்டவும் தயங்க மாட்டோம். ஜெயலலிதா எதிர்ப்புக் கொள்கையில் நான் தொடர்ந்து உறுதியாகவும்,தீவிரமாகவும் இருக்கிறேன்.
அரசு ஊழியர்கள் போராட்டத்தின்போது நான் ஐரோப்பாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தேன். எனவேஎன்னால் அறிக்கை எதையும் வெளியிட முடியாமல் போயிற்று(!). இருப்பினும் எனது கட்சித் தலைவர்களைஅறிக்கைகள் விடுமாறு நான் பணித்திருந்தேன்.
எனவே அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிக்கவில்லை என்று கூறுவது தவறு.
தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு நாங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் வெளியேற மாட்டோம். பிரதமர்வாஜ்பாய் ஐந்து ஆண்டு பதவிக் காலத்தை பூர்த்தி செய்வார். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
தேசிய ஜனநாயக கூட்டணி உருவானபோது, பாமகவும், அதிமுகவும் அதில் இடம்பெற்றன. 1999ம் ஆண்டுதான்இக் கூட்டணியில் திமுக சேர்ந்தது. இடையில் சட்டசபைத் தேர்தலின்போது கூட்டணியை விட்டு நாங்கள்விலகினோம். இப்போது பா.ஜ.கவுக்கும் எங்களுக்கும் இடையே நல்ல புரிந்து கொள்ளுதல் நிலவுகிறது.
பாமக, திமுக, மதிமுக ஆகியவை தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என்று இரண்டுகம்யூனிஸ்ட் கட்சிகளும் கூறுகின்றன. அப்படிக் கூற இவர்கள் யார், இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது.
இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒரே கட்சியாக இணைந்து தேர்தலை சந்திக்கத் தயாரா, நாங்கள் அப்படிக்கூறினால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா?
என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் திறமையும், சுய அறிவும் எங்களுக்கு உண்டு. மற்றவர்கள்யோசனை கூறும் அளவுக்கு நாங்கள் புத்தி மழுங்கிப் போனவர்கள் அல்ல.
கம்யூனிஸ்டுகளின் வலையில் விழுந்து விட வேண்டாம் என்று திமுகவை எச்சரிக்க விரும்புகிறேன். அவர்கள்நம்பத்தகுந்தவர்கள் அல்லர்.
ஜாதிக் கட்சிகளுடன் சேர மாட்டோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருப்பது எங்களை மனதில் வைத்துஅல்ல என்றார் ராமதாஸ்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications