அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்: 3 நீதிபதிகள் குழு விசாரணை தொடங்கியது
சென்னை:
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6,072 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் இன்று முதல் 3 நீதிபதிகள்குழுவின் விசாரணை தொடங்கியது. முதல் நாளான இன்று தலைமைச் செயலக ஊழியர்களிடம் விசாரணைநடைபெறுகிறது.
வேலை நிறுத்தம் செய்து டிஸ்மிஸ் ஆனவர்களில் 6,072 பேர் தவிர மற்ற அனைவரும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படிவேலையில் சேர்க்கப்பட்டு விட்டனர். இந்த 6072 பேரையும் மீண்டும் வேலையில் சேர்ப்பது தொடர்பாக 3 ஓய்வுபெற்ற நீதிபதிகள் கொண்ட குழு விசாரித்து முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதிகளான சம்பத், மலை சுப்ரமணியம், தங்கவேலு ஆகியோர் இந்த வழக்குகளைவிசாரிக்க நியமிக்கப்பட்டனர்.
இவர்களுக்கான அலுவலகம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில்ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு இன்று காலை 10.30 மணிக்கு விசாரணை தொடங்கியது. மாலை 5. மணி வரைவிசாரணை நீடிக்கும்.
முதல் நாளான இன்று தலைமைச் செயலகத்தைச் சேர்ந்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை,கால்நடைத்துறை மற்றும் மீன்வளத்துறை, விவசாயத்துறை ஊழியர்கள் 170 பேரிடம் விசாரணை நடைபெறுகிறது.
தலைமைச் செயலக ஊழியர்களில் 554 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். 2,215 பேர் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நீதிபதிகளுக்கு உதவ அரசுத் தரப்பிலிருந்து உயர் அதிகாரி ஒருவரை நியமிப்பது தொடர்பாகதமிழக அரசு ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பாக 3 நீதிபதிகளுடனும் ஆலோசனை நடத்திய பின்னர் உயர்அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.


