மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அத்துமீறி நுழைந்த கர்நாடக இளைஞர் கைது
சென்னை:
சென்னை விமான நிலையத்தின் பின் பகுதி வழியாக அத்துமீறி நுழைந்த கர்நாடக மாநில இளைஞரை மத்தியதொழில்துறை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
சென்னை விமான நிநலையத்தின் பின் பகுதியில் உள்ள முள் வேலியைத் தாண்டி ஒருவர் குதிப்பதை கண்காணிப்புகோபுரத்தில் பணியில் இருந்த மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் பார்த்தனர்.
இதைத் தொடர்ந்து அந்த நபரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவரிடம் விசாரணைநடத்தியபோது, தனது பெயர் பிரகாஷ் என்றும் கர்நாடக மாநிலம் தாவணகரே பகுதியைச் சேர்ந்தவர் என்றும்தெரிவித்தார்.
இது தவிர வேறு தகவல் எதையும் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார். அவரிடம் ஒறு கல்யாண பத்திரிக்கைமட்டுமே உள்ளது.
அவர் யார், எதற்காக விமான நிலையத்திற்குள் அத்து மீறி நுழைந்தார் என்பது குறித்து மீனம்பாக்கம் காவல் நிலையபோலீஸார் விசாரித்து வருகின்றனர். அவர் மன நிலை பாதிக்கப்பட்டவரா என்றும் மருத்துவ சோதனைநடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications