ஊழல்- நஷ்டம்: மதுரை கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து- ரிசர்வ் வங்கி நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை நகர கூட்டுறவு வங்கியில் முறைகேடுகள் நடந்ததால், அந்த வங்கிக்கான உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்துசெய்துள்ளது. இதனால் வங்கியில் பணத்தை முதலீடு செய்துள்ள பொதுமக்கள் பதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வங்கியின் நிர்வாகிகளுக்குத் தெரிந்தவர்களுக்கு ஏகப்பட்ட கடன்கள், எந்தவித விசாரணையும் இல்லாமல்கொடுக்கப்பட்டுள்ளது. கேட்டவர்களுக்கெல்லாம் கடன் கொடுத்தது, மற்றும் வங்கி நிர்வாகிகளில் சிலர் செய்தமுறைகேடுகள் ஆகியவை காரணமாக 97 வருட வரலாறு கொண்ட மதுரை நகர கூட்டுறவு வங்கி பெரும்நஷ்டத்தில் இயங்கி வந்தது.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரூ. 18 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது இந்த வங்கி. மொத்தம் 5,000தலீட்டாளர்கள் இதில் பணம் போட்டுள்ளனர். தற்போது தங்களது பணம் என்னவாகும் என்ற மிகப் பெரிய கேள்விமுதலீட்டாளர்களிடம் எழுந்துள்ளது.

வங்கியின் நஷ்டம் மற்றும் றைகேடு காரணமாக இதை தொடர்ந்து நடத்த முடியாது என்று கூறி சர்வ் வங்கிஉரிமத்தை ரத்து செய்து விட்டது. இதனால் வங்கியின் செயல்பாடுகள் முடங்கிப் போயுள்ளன.

வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டு வங்கி மூடப்பட்டதாக பரவிய தகவலையடுத்து முதலீட்டாளர்கள்அனைவரும், மதுரை நாயக்கர் புதுத் தெருவில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் குவிந்தனர்.

வங்கியின் நிர்வாகிகளில் ஒருவரான மாயன் என்பவர் செய்த முறைகேடுகள்தான் வங்கியை இந்த நிலைக்குக்கொண்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. அவர் கடந்த ஒரு வருடமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

வங்கியின் சிறப்பு அதிகாரி ஞானசிவம் நிருபர்களிடம் கூறுகையில்,

வங்கியை மறு சீரமைக்க உதவுமாறு சர்வ் வங்கியிடம் மீண்டும் ஒரு முறை கோரவுள்ளோம். இதுவரை ரூ. 4 கோடிஅளவுக்கு கடன் பாக்கியை மீட்டு விட்டோம், எனவே வங்கியை மீண்டும் திறக்க அனுமதித்தால் மீதமுள்ளபாக்கியையும் வசூலித்து விடும் நம்பிக்கை உள்ளது என்றார்.

இதற்கிடையே இதனை இனிமேல் வங்கியாக நடத்த முடியாது என்றும், கூட்டுறவு சங்கமாக மட்டுமே நடத்தமுடியும் என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+