மீண்டும் சென்னை கொண்டு வரப்படுகிறார் முரசொலி மாறன்
விழுப்புரம்:
தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ள மத்திய அமைச்சர் முரசொலி மாறனை அமெரிக்காவில் இருந்து சென்னைகொண்டு வந்துவிட அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
டெல்லி அகில இந்திய விஞ்ஞானக் கழக மருத்துவமனையில் மாறனுக்கு இருதயத்தில் செயற்கையாகப்பொறுத்தப்பட்ட வால்வில் பூஞ்சை தொற்று ஏற்பட்டு, ரத்த்திலும் அது கலந்ததால் அவரது உடல் நிலைமோசமானது. இதையடுத்து அப்பல்லோவில் வைக்கப்பட்டார்.
பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் 15ம் தேதி அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் உள்ள மெதாடிஸ்ட்மருத்துவமனைக்கு விமான ஆம்புலன்ஸ் மூலம் மாறன் கொண்டு செல்லப்பட்டார்.
இப்போதும் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே உள்ளார். கடந்த ஒரு மாதமாக அவரது உடல் நிலையில் சிறியமுன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாத் தெரிகிறது. இதையடுத்து அவரை அழைத்து வந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் 6ம் தேதி அவர் சென்னை கொண்டு வரப்பட்டு ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாகதிமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாறன் இன்னும் முழு அளவில் குணமடையவில்லை.ஆனாலும் அவரை சென்னை கொண்டு வந்து தொடர்ந்து சிகிச்சை அளிக்க அவரது குடும்பத்தினர் முடிவுசெய்துவிட்டனர்.
மாறனின் மகன் கலாநிதி மாறன் இன்று என்னிடம் இதனைத் தெரிவித்தார்.
வரும் 20ம் தேதி விழுப்புரத்தில் கூடும் திமுகவின் உயர் மட்டக் கூட்டத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தல்கூட்டணி குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும். ஜெயலலிதாவின் அரசின் அடுத்தடுத்த நெருக்குதல்கள்,உருட்டல்கள், மிரட்டல்களால் மக்கள் நொந்து போய்விட்டனர். இதனால் அவர்கள் பெரிய மாற்றத்தைஎதிர்பார்த்துள்ளனர் என்றார் கருணாநிதி.
முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் புதுக்கோட்டை விழாவுக்கு மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் அழைக்கபடாததுகுறித்துக் கேட்டபோது, தலை வலியும் பல் வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்றார் கருணாநிதி (ஜனாதிபதிஅப்துல் கலாம் பதவியேற்புக்கு தனக்கு அழைப்பு விடுக்காததை சுட்டிக் காட்டி மத்திய அரசுடன் ஜெயலலிதாமோதியதை மறைமுகமாக நினைவுகூர்ந்தார் கருணாநிதி)


