திருச்சி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 6 குழந்தைகள் பலி
திருச்சி:
திருச்சி கி.ஆ.பெ. அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 6 குழந்தைகள் பலியாகியுள்ளன.
அரசு மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் அலட்சியப் போக்கு காரணமாகவே இத்தனை குழந்தைகளும்இறந்ததாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
திருச்சி கி.ஆ.பெ. விஸநாதன் அரசினர் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள், நோயாளிகளிடம் பணம்கேட்டு வற்புறுத்துவதாக புகார்கள் உள்ளன.
குறிப்பாக மகப்பேறு மருத்துவ பிரிவில் உள்ள பெண் ஊழியர்கள், ஆயாக்கள் பிரசவத்திற்காக வரும்பெண்களிடம் மிகவும் கொடுமையாக நடந்து கொள்வதாகவும், பணம் கொடுத்தால்தான் எந்தக் காரியமும்நடப்பதாகவும் பொது மக்கள் குமுறுகிறார்கள்.
இந் நிலையில் பணம் கொடுக்க முடியாத வறுமை நிலையில் உள்ள 6 பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளை பெண்ஊழியர்கள் சரியாக கவனிக்கவில்லை என்று தெரிகிறது.
அக் குழந்தைகளுக்கு டாக்டர்களும் சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் அந்த 6 குழந்தைகளும் பரிதாபமாக இறந்துள்ளன.
இறந்த குழந்தைகளின் சடலங்களைக் கொடுக்கக் கூட பணம் கேட்டு அடாவடி செய்துள்ளனர், கொஞ்சமும்மனிதாபிமானமற்ற அந்தப் பெண் ஊழியர்கள்.
ஒரே நாளில் பிரசவித்த 6 குழந்தைகளும் இறந்துள்ளது திருச்சி அரசு மருத்துவமனை மீது மக்களுக்கு உள்ளநம்பிக்கையை தகர்த்துள்ளது.


