For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமலுக்கு வந்தது சி.எ.எஸ்: சென்னையில் பல டிவி சேனல்கள் இருட்டடிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கேபிள் டிவியில் வேண்டிய சேனலை மட்டும் பார்க்கும் வசதியைத் தரும் கண்டிசனல் ஆக்சஸ் சிஸ்டம் முறை CAS இன்று முதல் சென்னையில் அமலுக்கு வந்தது.

இதையடுத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு வழங்கி வந்த பே சேனல்களின் ஒளிபரப்பை சுமங்கலி கேபிள்விஷன் மற்றும் ஹாத்வே கம்யூனிகேஷன் ஆகியவை நிறுத்திக் கொண்டுவிட்டன. இதனால் சென்னை முழுவதும்சன் டிவி மற்றும் பே சேனல்கள் தெரியவில்லை.

தமிழகத்தைப் பொறுத்த வரை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சுமங்கலி (சன் டிவி நிறுவனத்துக்கு சொந்தமானது)மற்றும் ஹாத்வே கம்யூனிகேசன்ஸ் ஆகியோரிடம் இருந்து தான் சாட்டிலைட் டிவிக்களின் ஒளிபரப்பைப் பெற்றுவீடுகளுக்கு இணைப்புகளைத் தந்துள்ளனர்.

பல்வேறு சாட்டிலைட் சேனல்களின் ஒளிபரப்பை தனது ஆண்டெனாக்கள் மூலம் இந்த இரு நிறுவனங்கள் தான்டெளன்லோட் செய்து கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு வழங்கி வருகின்றன. இதற்காக இந்த இருநிறுவனங்களுக்கும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மாதக் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.

இந் நிலையில் நாடு முழுவதும் மக்கள் விரும்பும் சேனலை மட்டும் பார்க்கும் வசதியைத் தரும் Conditional AccessSystem (CAS) முறையை மத்திய அரசு அமலாக்கி வருகிறது. முதல்கட்டமாக டெல்லி, கொல்கத்தா, மும்பை,சென்னை ஆகிய பெரு நகரங்களில் இந்த முறை அமலாக்கப்பட்டு வருகிறது.

இந்த முறைப்படி மக்கள் தாங்கள் பார்க்க விரும்பும் சேனலை மட்டும் பார்த்து அதற்கு மட்டும் கேபிள் டிவிஆபரேட்டர்களுக்கு கட்டணம் செலுத்தினால் போதும். இது வசதியான முறை தான்.

ஆனால், இவ்வாறு வேண்டிய சேனலை மட்டும் பார்க்க செட் டாப் பாக்ஸ் (Set top box) என்ற கருவியை மக்கள்வாங்க வேண்டும். இதன் விலை ரூ. 3,000 முதல் ரூ. 5,000 வரை உள்ளது. திடீரென இவ்வளவு பணம் போட்டு இக்கருவிகளை வாங்கும் நிலையில் பொது மக்கள் இல்லை.

இந் நிலையில் மத்திய அரசின் உத்தரவுப்படி சென்னையில் இன்று முதல் இஅகு அமலுக்கு வந்துவிட்டது.இதையடுத்து செட் டாப் பாக்ஸ் இல்லாத வீடுகளுக்கு (கிட்டத்தட்ட கேபிள் டிவி வசதி உள்ள சென்னையின் எல்லாவீடுகளுக்கும்) தங்களது ஒளிபரப்பை சுமங்கலி கேபிள் விஷன் மற்றும் ஹாத்வே கம்யூனிகேசன்ஸ் ஆகியவைநிறுத்திக் கொண்டுவிட்டன.

இதனால் சன் டிவி, ஜெயா டிவி, ராஜ் டிவி, ஆஜ் தக், ஸ்டார் நியூஸ், டி.டி. உள்ளிட்ட ப்ரீ சேனல்கள் மட்டுமேசென்னையில் தெரிகின்றன.

எஸ்.சி.வி., விஜய், ஸீ, சோனி, ஈ.எஸ்.பி.என், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஆகியவை தெரியவில்லை.

சன் டிவியின் ஒளிபரப்பும் காலையில் சில மணி நேரம் தெரியவில்லை. ப்ரீ சேனலான சன் டிவி ஒளிபரப்பைசுமங்கலி கேபிள் விஷன் நிறுவனம் நிறுத்தி வைத்தது. (இதனால் அனைவரும் செட் டாப் பாக்ஸ்களைவாங்குவார்கள் என்ற நம்பிக்கையில்).

இவ்வாறு டிவி ஒளிபரப்புகள் திடீரென நின்று போனதால் குழம்பிப் போன சென்னை மக்கள் கேபிள் டிவிஆபரேட்டர்களைப் பிடிதது உலுக்க ஆரம்பித்துள்ளனர்.

இதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விளக்கம் அளித்து வரும் கேபிள் டிவிக்காரர்கள் சன் டிவி,சுமங்கலி, ஹாத்வே கேபிள் போன்றவற்றின் தொலைபேசி எண்களை மக்களிடம் தந்து தொடர்பு கொள்ளச்சொல்லி வருகின்றனர்.

இவ்வாறு தங்களைத் தொடர்பு கொள்ளும் மக்களிடம் செட் டாப் பாக்ஸ் பற்றி எடுத்துச் சொல்லி, அதை தாங்களேவிற்பதாகவும், அதைத் தங்களிடம் வந்து வாங்கிக் கொள்ளுமாறும் கூறி வருகின்றன சுமங்கலியும் ஹாத்வேநிறுவனமும்.

இதில் ஹாத்வே ஒரு செட் டாப் பாக்ஸின் விலையை ரூ. 3,000 மாக நிர்ணயித்துள்ளது. சுமங்கலி இதன் விலையைரூ. 3,500 என்று சொல்கிறது.

இந்த விலையைக் கேட்டவுடனேயே போனை வைத்துவிட்டு மத்திய அரசைத் திட்ட ஆரம்பித்துள்ளனர் பொதுமக்கள். பெரும்பாலான மக்கள் இந்தக் கருவியை வாங்க விரும்பவில்லை.

காரணம், தங்களுக்கு இணைப்புத் தந்த கேபிள் டிவி ஆபரேட்டருக்கு மாதந்தோறும் கொடுக்கும் கட்டணத்தைவழக்கம் போலத் தர வேண்டும். அதே நேரத்தில் பார்க்கும் சேனலுக்கு என தனியே ஒரு கட்டணத்தையும் தரவேண்டும்.

இதனால் இதுவரை கேபிள் டிவியை ரூ. 100க்கு பார்த்தவர்கள், இனிமேல் ரூ. 250 வரை செலவு செய்ய வேண்டிவரும். இது தவிர செட் டாப் பாக்ஸை வேறு ரூ. 3,500 கொடுத்து வாங்கியாக வேண்டும்.

இதற்கு மக்கள் உடனடியாகத் தயாராக இல்லை. ஆனால், செட் டாப் பாக்ஸ்களை வாங்க அவ்வளவாக இன்றுயாரும் ஆர்வம் காட்டாததால் சன் டிவியின் ஒளிபரப்பு மீண்டும் தெரிய ஆரம்பித்தது.

இதற்கிடையே கேபிள் டிவி சர்வீஸ் புரோவைடர்களான சுமங்கலி, ஹாத்வே மற்றும் பொது மக்களுக்கு இடையேசிக்கிக் கொண்டுவிட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் முதல்வர் ஜெயலலிதாவிடம் உதவி கோரி நிற்கின்றன.

CAS முறையை அமலாக்குவதும் அதை ரத்து செய்வதும் முதல்வரின் கையில் தான் உள்ளது என்று கூறியுள்ளகேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத் தலைவர் காயல் இளவரசு. அவர் கூறியதாவது:

இந்த விஷயத்தில் முதல்வர் தான் நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

செட் டாப் பாக்ஸ் மீதான விற்பனை வரியை முதல்வர் குறைக்க வேண்டும். இதன் மூலம் இந்த பாக்ஸ்களின் விலைரூ. 600 வரை குறையும், இதனால் மக்களுக்கும் சிரமம் குறையும்.

மேலும் கேபிள் கட்டணம் எவ்வளவு இருக்கும், எப்படி கட்டணத்தை வசூல் செய்வது என்ற விஷயத்தில்மக்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் (கேபிள் டிவி ஆபரேட்டர்கள்) குழப்பம் நிலவுகிறது. இதைத் தீர்க்கக் கோரிமத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கும் தந்திகள் அனுப்பியுள்ளோம் என்றார்.

இதற்கிடையே CAS முறையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கு இன்றே விசாரணைக்கு வருகிறது.

Mail this to a friend  Post your feedback  Print this page 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X