நாகை நீதிமன்றத்தில் இன்று வைகோ ஆஜர்
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டனம்:
அதிமுக தொண்டர்களைத் தாக்கிய வழக்கில், நாகப்பட்டனம் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று நாகப்பட்டனம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுகிறார்.
கடந்த 1984ம் ஆண்டு நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அப்போதுதிமுகவில் இருந்த வைகோ கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தின்போது அதிமுகதொண்டர்களுக்கும், திமுக தொண்டர்களுக்கும் இடையே மோதல் நடந்தது.
இதுதொடர்பாக வைகோ உள்ளிட்ட திமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முதலில்மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணை தற்போது நாகை நீதிமன்றத்திற்குமாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் ஆஜராக இன்று வைகோ நாகைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.












Click it and Unblock the Notifications