நாகப்பா கொலை: ஜெ.வுக்கு கர்நாடக கோர்ட் நோட்டீஸ்
பெங்களூர்:
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா வீரப்பனுடைய காட்டில் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தது தொடர்பாக அவரது மனைவி பரிமளா நாகப்பா, தொடர்ந்த வழக்கில்தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, மத்திய அரசு ஆகியோர்விளக்கம் தெரிவிக்குமாறு கூறி கர்நாடக உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வீரப்பனால் கடத்தப்பட்ட நாகப்பா காட்டுப் பகுதியில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார். அவரதுசாவுக்கு யார் காரணம் என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. வீரப்பன்தான் காரணம் என்றுகர்நாடக அரசும், கர்நாடக அதிரடிப்படை வீரர்கள்தான் காரணம் என்று தமிழக அரசும் கூறியது.
இந்த நிலையில் நாகப்பாவின் மனைவி பரிமளா, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தமனுவில், எனது கணவர் நாகப்பா வீரப்பனால் கடத்தப்பட்ட பின்னர் மொத்தம் 6 முறை கேசட்அனுப்பினான். ஒவ்வொரு முறையும் நாகப்பா நலமுடன் உள்ளதாகவும், அவருக்கு தீங்கு நேராதுஎன்றும் கூறியிருந்தான். இதிலிருந்து நாகப்பாவைக் கொலை செய்யும் எண்ணத்தில் அவன் இல்லைஎன்பது தெளிவாகிறது.
எனது கணவரை வீரப்பன் கொன்றிருக்க முடியாது. இதில் வேறு யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதுமர்மமாக உள்ளது. எனது கணவர் கொலை தொடர்பாக இதுவரை 23 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆனால் விசாரணையில் எங்களுக்குத் திருப்தியில்லை.
எனது கணவர் கொலை குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்போதுதான்உண்மை தெரியவரும். எனவே இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்என்று கூறியிருந்தார்.
மனுவை பரிசீலித்த நீதிபதி குமார் மத்திய அரசு, கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, தமிழக முதல்வர்ஜெயலலிதா, கர்நாடக அமைச்சர் ராஜு கெளடா ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications