காதலனிடமிருந்து காதலியைப் பிரித்த கோர்ட்
சென்னை:
18 வயது நிரம்பாத காரணத்தால், கர்ப்பிணியாக இருந்த பெண்ணை அவரது காதலனிடமிருந்துபிரித்து பெற்றோரிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வேலூரைச் சேர்ந்த நாராயணன் என்பவரின் மகள் முத்துலட்சமி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்தகேசவன் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இதற்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால், இருவரும்பெங்களூருக்குச் சென்று அங்கு கோவிலில் வைத்து கல்யாணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் தங்களது மகளை தேடிக் கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு போலீஸாருக்குஉத்தரவிடக் கோரி முத்துலட்சுமியின் பெற்றோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள் கொணர்(ஹேபியஸ் கார்பஸ்) மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிர்புர்கர் மற்றும் தினகரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,காதலர்களை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்தபெங்களூரில் தங்கியிருந்த காதலர்களை போலீஸார் சென்னைக்கு அழைத்து வந்து இன்றுஉயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதிகள், முத்துலட்சுமிக்கு இன்னும் 18 வயது கூடஆகவில்லை. மேலும் அவர் தற்போது கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் அவர் பெற்றோரின்பராமரிப்பில் இருப்பதுதான் நல்லது. எனவே அவரை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறுஉத்தரவிட்டனர்.
இதைக் கேட்டதும் முத்துலட்சுமியும், கேசவனும் கதறி அழுதனர். தங்களைப் பிரிக்க வேண்டாம்என்று நீதிபதிகளிடம் மன்றாடினர். இருப்பினும் அவர்களை அழைத்துச் செல்லுமாறு நீதிபதிகள்உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து வெளியே வந்த முத்துலட்சுமி மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவரைப் பார்த்துஓடிவந்த கேசவனை, முத்துலட்சுமியின் பெற்றோரும், உறவினர்களும் சரமாரியாக அடித்துஉதைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் முத்துலட்சுமியைகட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications