பொடா: பா.ஜ.க.வுக்கு கருணாநிதி கடும் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்:

பொடா சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை தேசிய ஜனநாயகக்கூட்டணி அரசு தொடர்ந்து கண்டுகொள்ளாமல் இருந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்கநேரிடும் என்று திமுக தலைவர் கருணாநிதி பா.ஜ.க.வுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பூர் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், பொடா சட்டம் நாடாளுமன்றத்தில்கொண்டு வரப்பட்டபோது, அது தவறாக பயன்படுத்தப் பட மாட்டாது என்று துணை பிரதமர்அத்வானி உறுதியளித்தார்.

அத்வானியின் உறுதிமொழியை நம்பித்தான் அந்த சட்டத்திற்கு ஆதரவாக திமுக, பாமக மற்றும்மதிமுக ஆகியவை வாக்களித்தன. ஆனால் இப்போது முற்றிலும் தவறாகவும், எதிர்க்கட்சியினரைபழிவாங்கவும் பொடாவை அதிமுக அரசு பயன்படுத்துகிறது.

எனவே அந்த சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். ஆனால் பொடாவை வாபஸ் பெற மாட்டோம் என்று பா.ஜ.க. தலைவர் வெங்கையாநாயுடு கூறுகிறார். மத்திய அரசும் அமைதியாக உள்ளது.

இதனால் எனக்கோ அல்லது திமுகவுக்கோ எந்த நஷ்டமும் இல்லை, நாங்கள் இழக்கப் போவதுஎதையும் அல்ல. ஆனால் எங்களது கோரிக்கையை தொடர்ந்த அவர்கள் புறக்கணிக்க நினைத்தால்அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்க விரும்புகிறேன் என்றார் கருணாநிதி.

பொடா மறு ஆய்வுக்குழுவின் அதிகாரம் குறித்து தெளிவற்ற நிலை காணப்படுவதாக மதிமுகவின்மத்திய அமைச்சர் எம்.கண்ணப்பன் கூறியுள்ளது குறித்து கருணாநிதியிடம் கேட்டபோது,யாருக்குமே இப்போது தெளிவில்லை என்றார் நகைச்சுவையாக.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+