சென்னை ஏர்ஷோ: "பொதிகையில்" நேரடி ஒளிபரப்பு
சென்னை:
சென்னையில் சனிக்கிழமை நடைபெறவுள்ள பிரமாண்டமான விமான சாகச நிகழ்ச்சியை தமிழகமக்கள் அனைவரும் கண்டு களிக்கும் வகையில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய தூர்தர்ஷனின்பொதிகை அலைவரிசை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்திலேயே முதல் முறையாக சென்னை மெரீனா கடற்கரையில் விமானப்படையின் விமானசாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் சுகோய் ரக விமானங்கள், சூர்யா கிரண் விமானங்கள்,ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட 67 விமானங்கள் கலந்துகொண்டு வானில் சாகசம் செய்யவுள்ளன.
இந்த நிகழ்ச்சியை முதல்வர் ஜெயலலிதாவும் கண்டுகளிக்கவுள்ளார். சனிக்கிழமை காலை 10 மணிமுதல் 11 மணி வரை இந்த சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் நடைபெறும் முதலாவது விமான சாகச நிகழ்ச்சி என்பதால் தமிழக மக்கள் அனைவரும்கண்டு களிக்கும் வகையில் இதனை நேரடியாக ஒளிபரப்பு செய்ய தூர்தர்ஷன் முடிவு செய்துள்ளது.காலை 10 மணி முதல் 11.15 மணி வரை நேரடி ஒளிபரப்பு இருக்கும். பொதிகை அலைவரிசையில்இதைக் காணலாம்.


