ரூ. 80 லட்சம் பணம், நகைகளுடன் வங்கி லாக்கர் திருட்டு !
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி அருகே கிராம கூட்டுறவு வங்கியில், கன்னக் கோல் வைத்து, வங்கி லாக்கரைஅப்படியே சிலர் திருடிச் சென்று விட்டனர்.
பாண்டிச்சேரியில் கிராம கூட்டுறவு கடன் வழங்கும் வங்கி உள்ளது. இந்த வங்கியின் பின் பக்கம்நேற்று இரவு சிலர் சுவற்றில் பள்ளம் தோண்டி உள்ளே புகுந்தனர். அங்கிருந்த வங்கி லாக்கரைஉடைத்து பணத்தை எடுக்க முயன்றுள்ளனர். ஆனால் முடியாத காரணத்தால், லாக்கரை அப்படியேதூக்கிக் கொண்டு சென்று விட்டனர்.
காலையில் வந்து பார்த்த ஊழியர்கள் லாக்கரை காணாமல் திடுக்கிட்டு போலீஸில் புகார்கொடுத்தனர். அந்த லாக்கரில் ரூ. 80 லட்சம் அளவுக்கு பணம், அடகு வைக்கப்பட்ட நகைகள்இருப்பதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
பாண்டிச்சேரியில் நேற்று இரவு பெய்த கன மழையைப் பயன்படுத்தி லாக்கர் திருட்டில் திருடர்கள்ஈடுபட்டுள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர்.
லாக்கர் திருடர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications