டியூஷனுக்கு வற்புறுத்தியதால் மாணவன் தற்கொலை
மதுரை:
மதுரையில் பிரபலமான புனித மேரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த மாணவன்தற்கொலை செய்து கொண்டான். இதுதொடர்பாக அந்த மாணவனின் வகுப்பு ஆசிரியர் கைதுசெய்யப்பட்டார்.
புனித மேரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தவன் நாசர். இவனது வகுப்பு ஆசிரியர்ஜேம்ஸ் டேவிட். நாசரை, டியூஷன் வகுப்பில் சேருமாறு, டேவிட் வற்புறுத்தி வந்ததாககூறப்படுகிறது. இதுகுறித்து தனது பெற்றோர்களிடமும் நாசர் பலமுறை கூறியுள்ளதாகத் தெரிகிறது.
ஆனால் டியூஷன் வகுப்பில் சேர நாசருக்கு விருப்பம் இல்லை. இருப்பினும் டேவிட் தொடர்ந்துவற்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், ஆசிரியர் டேவிட் வற்புறுத்தல் தாங்க முடியாமல்தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.
மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தற்கொலை தொடர்பாக ஆசிரியர் ஜேம்ஸ்டேவிட் இன்று காலை கைது செய்யப்பட்டார்.


