For Daily Alerts
Just In
கூட்டணி: திமுகதான் முடிவு செய்ய வேண்டும் .. திருநாவுக்கரசர்
திருச்சி:
லோக்சபா தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதா, வேண்டாமா என்பதை திமுகவும்,மதிமுகவும் தாங்களாகத்தான் முடிவு தெசய்ய வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறைஇணை அமைச்சர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த திருநாவுக்கரசர்அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக, மதிமுக, பாமக போன்ற கட்சிகள் தற்போதுஎங்களது கூட்டணியில்தான் உள்ளன. பா.ஜ.க, வரும் லோக் சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணிவைக்கவுள்ளதாக வெளியாகும் செய்திகள் தவறானவை.
திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள நாங்கள் எப்படி அதிமுகவுடன் கூட்டணி சேர முடியும்? இதைதிமுகவும், மதிமுகவும் உணர வேண்டும். எனவே லோக் சபா தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் இருப்பதா, இல்லையா என்பதை அந்தக் கட்சிகள்தான் முடிவு செய்ய வேண்டும்என்றார் அவர்.


