முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்!
சென்னை: சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க விஜய் டெல்லி சென்றிருந்தார். ஆனால், அவர் டெல்லி சென்றதற்கான காரணமே வேறு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார். இந்த விமர்சனம் தவெகவினரை சூடாக்கியிருக்கிறது.
இன்று சென்னையில் திமுக மகளிரணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ஸ்டாலின், விஜய்யின் டெல்லி பயணம் குறித்து விமர்சித்திருக்கிறார்.

அவர் பேசியதாவது, "நான் முதலமைச்சராக இருந்தபோது டெல்லி சென்றிருந்தேன். அப்போது இது குறித்து இன்று முதலமைச்சராக இருப்பவர் என்னென்ன விமர்சனங்களை வைத்தார் தெரியுமா? நினைவுபடுத்துகிறேன்.
அமலாக்கத்துறை விசாரணையை தவிர்க்கதான் டெல்லி சென்றதாகவும், பாஜகவின் காலில் விழுந்து மறைமுக கூட்டணி வைக்கவும்தான் டெல்லி சென்றார். எனவேதான் குரூப் போட்டோ எடுக்கும்போது முன்வரிசையில் நிற்கவைத்து ஸ்டாலினுக்கு இடம் கொடுத்தார்கள் என்று சொன்னார்.
இப்போது நீங்கள் டெல்லி போனீர்களே என்ன செய்துவிட்டு வந்தீர்கள்? நான் கேட்கிறேன்.. கரூர் சிபிஐ வழக்கிலிருந்து தப்பிக்கத்தான் நீங்கள் டெல்லிக்கு போனீங்களா? பாஜகவை உறுதியாக விமர்சித்து பேசினால் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்று பயப்படுகிறீர்களா? இப்படியெல்லாம் உங்களை மாதிரி நான் தரம் தாழ்ந்து விமர்சிக்க விரும்பவில்லை.
மும்மொழி கொள்கையை அமல்படுத்த மறுத்த காரணத்திற்காக, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை விடுவிக்காமல் பிளாக் மெயில் செய்தார்கள். திமுக அரசு அதை எதிர்த்து போராடியது. ஆனால் அந்த போராட்டத்தை கூட, பாசிசம்.. பாயசம் என நக்கல் நையாண்டி செய்தீர்களே! இப்போது நீங்கள் மட்டும் என்ன செய்துவிட்டு வந்திருக்கிறீர்கள்?
நிபந்தனை இல்லாமல் நிதியை விடுவிக்க வேண்டும் என நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அப்படித்தான் கேட்க முடியும். இது சினிமா இல்லை.. ஆட்சி நிர்வாகம் அதை புரிந்துக்கொள்ளுங்கள்.
மாநில உரிமைகள் எதுவாக இருந்தாலும், திராவிட மாடல் அரசு போட்டு தந்த ப்ளூ பிரிண்ட் படிதான் யாராக இருந்தாலும் செயல்பட முடியும்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications