நினைத்தது ஒன்று, நடந்தது இரண்டு!
வேலூர்:
வேலூர் மாவட்டம் வாலாஜப்பேட்டையில், விருப்பத்தை மீறி கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்ததால்,தாலி கட்டும் நேரத்தில், எல்லோரிடமும் "சாரி" சொல்லி விட்டு மணமேடையை விட்டு எழுந்துசென்றார் மணமகள். இதைத் தொடர்ந்து அந்த மணமகனுக்கு வேறு பெண்ணை நிச்சயம் செய்துஅதே நேரத்தில் திருமணம் நடத்தப்பட்டது.
வேலூர் மாவட்டம் வாலாஜபேட்டைக்கு அருகே உள்ளது கீழ்புதுப்பேட்டை. இந்தப் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் அவரதுமகள் அருணாவுக்கும், குமரேசன் என்பவருக்கும் கல்யாணம் செய்யநிச்சயம் செய்தார். இவர்களது திருமணம் சனிக்கிழமை காலை நடப்பதாகஇருந்தது.
வெள்ளிக்கிழமை இரவே மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் திருமணமண்டபத்திற்கு வந்து விட்டனர். காலை 6.30 மணி முதல் 7.30க்குள்முகூர்த்தம் என முடிவு செய்யப்பட்டிருந்தது.
காலை 6 மணி முதலே சடங்குகள் தொடங்கின. தாலி கட்டும் நேரம்நெருங்கியது. மாப்பிள்ளையின் கையில் தாலி கொடுக்கப்பட்டது. அவர்கட்டத் தயாராக இருந்தார். அப்போது, திடீரென்று எழுந்த அருணா,சினிமாவில் வருவது போல மாலையைக் கழற்றி கீழே வைத்தார். பின்னர்அனைவரும் என்னை மன்னியுங்கள், இந்த திருமணத்தில் எனக்குவிருப்பம் இல்லை என்று கூறி தரையில் விழுந்து மன்னிப்புக் கேட்டவாறுஅங்கிருந்து வெளியேறினார்.
இதைக் கண்ட திருமண மண்டபமே அதிர்ச்சியில் மூழ்கியது. மணமகன்நிலையைக் கேட்க வேண்டாம். அப்படியே கல் போல சமைந்து விட்டார்.இதைத் தொடர்ந்து மாப்பிள்ளை வீட்டார் ஆலோசனை நடத்தினர்.பின்னர் அங்கிருந்த முருகேசன் என்பவரை அணுகி அவரது மகளைமணமகளாக்க அனுமதி கேட்டனர்.
அவரும் உடனடியாக வீட்டுக்குக் கிளம்பி, தனது மகளை அலங்கரித்துஅழைத்து வந்தார். பின்னர் குறித்த நேரத்தில் அவருக்கும், குமரேசனுக்கும்திருமணம் நடந்தது.
திடீரென்று வாக்அவுட் செய்து வெளியேறிய அருணாவிடம் பேசியஅவரது பெற்றோர்கள், அவரது மனதில் இருந்த அவரது தாய் மாமனுக்கேகட்டிக் கொடுக்க முடிவு செய்தனர். பின்னர் அருணாவை அவரது தாய்மாமன் இருக்கும் வள்ளிமலைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்துஇருவருக்கும் திருமணம் நடத்தப்பட்டது.
நிச்சயிக்கப்பட்ட கல்யாணம் நடக்கவில்லை என்றாலும் கூடமாப்பிள்ளைக்கும், பெண்ணுக்கும் ஒரே நாளில் கல்யாணம் நடந்துமுடிந்தது வாலாஜாபேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


