For Daily Alerts
Just In
அழகிப் போட்டிக்கு சினேகா, மீரா ஜாஸ்மின் நடுவர்கள் !
சென்னை:
சென்னையில் செப்டம்பர் 14ம் தேதி தென்னிந்திய அழகிப் போட்டி நடைபெறவுள்ளது. இதில்நடுவர்களாக நடிகைகள் சினேகா, குஷ்பு, மீரா ஜாஸ்மின் மற்றும் நடிகர் பிரசாந்த் ஆகியோர்கலந்துகொள்ளவுள்ளனர்.
தென் மாநிலங்களைச் சேர்ந்த 30 அழகிகள் இதில் பங்கேற்கவுள்ளனர். 13 மற்றும் 14 ஆகிய இருதேதிகளில் இந்த அழகிப் போட்டி நடக்கிறது. முதல் நாள் பேஷன் ஷோவும், அழகிப் போட்டிக்கானமுதல் கட்டத் தேர்வும் நடைபெறும்.
2-வது நாளான 14ம் தேதி அழகிப் போட்டியின் இறுதிக் கட்டம் நடக்கிறது. இதில் நடுவர்களாகநடிகைகள் குஷ்பு, சினேகா, மீரா ஜாஸ்மின் ஆகியோரும், நடிகர் பிரசாந்த்தும் கலந்துகொள்கிறார்கள்.
சிறந்த முகம், கண், உடல் அழகி மற்றும் தென்னிந்தியஅழகி ஆகியோர் இதில் தேர்வுசெய்யப்படுவர்.


