அண்ணனை மணந்த தங்கை: பெற்றோர் தற்கொலை
மதுரை:
அண்ணன் முறையாக வருபவரை தங்களது மகள் திருமணம் செய்து காண்டதால்அவமானமடைந்த பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது வாசி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மூக்கன்என்பவரின் மகள் ரேவதி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சின்னன் என்பவருக்கும் இடையேகாதல் ஏற்பட்டது.
சின்னனுடைய தந்தையும், ரேவதியின் தந்தையும் பங்காளிகள் ஆவர். எனவே ரேவதியும்,சின்னனும் காதலிக்கும் விஷயம் தெரிந்துதம் அதிர்ச்சி அடைந்தார் மூக்கன். இதற்கிடையேஇவர்களது காதல் விவகாரம் ஊருக்கும் தெரிந்து விட்டது.எனவே பஞ்சாயத்து கூட்டப்பட்டது.
அண்ணன், தங்கை உறவு வருவதால் காதலிக்கக் கூடாது என்று ஊர்ப் பஞசாயத்து தடை விதித்தது.இருப்பினும் ரேவதியும், சின்னனும் தங்களது காதலை மறக்கவில்லை. இதைத் தொடர்ந்து ஊரைவிட்டு ஓடிப் பாய் விட்டனர்.
இதனால் மூக்கனை ஊர் பழித்தது. இதனால் மனமுடைந்த மூக்கன், தனது மனைவியுடன் விஷம்சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications