சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களால் தாக்கப்பட்டவர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை நகரின் பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களால் தாக்கப்பட்டதாககூறப்படும் வாலிபர், அந்த நிறுவனத்தின் மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை தி.நகர், ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ். பலவிதமான பொருட்களும்மிக மிக சொற்ப விலையில் கிடைப்பதால் சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும்பிரபலமானது இந்த நிறுவனம்.

ஆனால் இங்கு வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் மரியாதையும் மிக மிக மலிவாகவேஇருக்கும். வருகிற வாடிக்கையாளர்கள் ஏதாவது கேட்டால் சரியான பதில் சொல்வதில்லை, மீறிக்கேட்டால் திட்டுவது, முடிந்தால் அடிப்பது என இந்த நிறுவனத்தின் மீது ஏகப்பட்ட புகார்கள் உள்ளன.

முன்பு ஒருமுறை திருடி விட்டார் என்று கூறி மிகவும் பெரிய இடத்துப் பெண்மணியையேகடைக்குள் வைத்துப் பூட்டி கொடுமைப்படுத்தியதாக இந்த நிறுவனத்தினர் மீது புகார் கிளம்பியது.

இந்த நிலையில் மற்றொரு கொடுமையும் இங்கு நிகழ்ந்துள்ளது. சென்னை வில்லிவாக்கம் பகுதியைச்சேர்ந்த கணேசன் என்பவர் சரவணா ஸ்டோர்ஸுக்கு பொருள் வாங்கப் போயுள்ளார். அப்போதுஒரு ஊழியரிடம் ஏதோ கேட்க அவர் அலட்சியமாக பதில் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஊழியர்கள் கணேசனை தனி இடத்திற்குக் கூட்டிச் சென்றுஅடித்து விட்டனர். இதனால் மனமுடைந்த கணேசன், நேராக மாடியிலிருந்து கீழே குதித்து விட்டார்.இதில் படுகாயமடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்குசரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் தன்னை அடித்த விவரத்தைக் கூறியுள்ளார் கணேசன். அதன் பிறகுஅவர் இறந்து விட்டார்.

இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+