"லோக்சபாவில் அமைச்சர்கள் தாய் மொழியில் பதிலளிக்கலாம்"
சென்னை:
நாடாளுமன்ற லோக் சபாவில், மத்திய அமைச்சர்கள் தங்களது தாய் மொழியிலேயே பதில்களைத்தரலாம் என்று லோக் சபா சபாநாயகர் மனோகர் ஜோஷி அறிவித்துள்ளதாக மதிமுகவைச் சேர்ந்தமத்திய இணை அமைச்சர் எம்.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,லோக் சபாவில் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தாய் மொழியிலேயே மத்திய அமைச்சர்கள்பதிலளிக்க அனுமதிக்குமாறு சபாநாயகர்
மனோகர் ஜோஷிக்கு மதிமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மதிமுக சார்பில்கண்ணப்பன் இந்தக் கோரிக்கையை வைத்திருந்தார்.
எம்.பிக்கள் தாய் மொழியில் பேச அனுமதிக்கப்படும்போது, அமைச்சர்களும் தங்களது தாய்மொழியில் பதிலளிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று கண்ணப்பன் கோரியிருந்தார்.
இதைத் தொடர்ந்து இந்தி, ஆங்கிலம் போல, இனிமேல் தங்களது தாய் மொழியிலும் அமைச்சர்கள்பதிலளிக்கலாம் என்று மனோகர் ஜோஷி அனுமதி அளித்துள்ளார் என்று அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.


