கிடா வெட்டு: பூசாரியை விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆடு, கோழி பலியிடுதலைத் தடுக்கும் வகையில், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள சாமியாடியையும், கைதானமற்றவர்களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிஉத்தரவிட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி அருகே உள்ள ஒத்தப்பனை சுடலையாண்டவர் கோவிலில் நடக்கும்திருவிழாவின்போது ஆடு, பன்றிகள் பலியிடுவது வழக்கம். ஆனால் தற்போது அரசு தடை விதித்துள்ளதால் அங்குபதற்றம் ஏற்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன் அங்கு நள்ளிரவு பூஜைக்குப் பின்னர் ஆடு, பன்றி பலியிடும் நிகழ்ச்சிக்குஏற்பாடாகியிருந்தது. ஆனால் போலீஸார் ஆடு, பன்றிகளை வெட்டும் பூசாரியான முத்துராஜ் என்பவரை வீட்டுக்காவலில் வைத்தனர். மற்ற சிலர் கைது செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி குலசேகரன் ஆகியோர் போலீசாருக்கு கடும்டோஸ் விட்டனர்.

நாங்கள் உத்தரவிட்டும் கூட ஆடு, பன்றி வெட்டுவதை போலீஸார் தடுத்ததற்கு நீதிபதிகள் கடும் கண்டனம்தெரிவித்தனர்.

இந் நிலையில் இன்று அவர்கள் வெளியிட்ட உத்தரவில், கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளசாமியாடியும் பூசாரியுமான முத்துராஜ் மற்றும் வேறு சிலரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றுகூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+