இளங்கோவன் மீதான அவதூறு வழக்கு: அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி காங்கிரஸ் செயல்தலைவர் இளங்கோவன் தொடுத்துள்ள மனுவுக்கு ஒரு வாரத்தில் விளக்கம் தருமாறு தமிழக அரசுக்குசென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரை மாவட்டம் உத்தமபாளையம் ஊராட்சித் தேர்தல் பிரசாரத்தின்போது, முதல்வர் ஜெயலலிதாகுறித்து அவதூறாகப் பேசியதாக இளங்கோவன் மீது தமிழக அரசு அவதூறு வழக்குத்தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் இளங்கோவன்மனு செய்தார். ஆனால், அந்த மனு நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் இளங்கோவன்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கனகராஜ், இதுதொடர்பாக ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறுநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இளங்கோவன் மீது மேலும் பல அவதூறு வழக்குகளை தமிழக அரசு தொடர்ந்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.
இதில் ஒரு வழக்கை வாபஸ் பெறச் சொல்லி உயர் நீதிமன்றமே தமிழக அரசுக்கு நேற்றுஉத்தரவிட்டது நினைவுகூறத்தக்கது.


