மெரீனாவில் கூட்டம் நடத்தச் சென்ற நல்லகண்ணு, வரதராஜன் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மெரீனா கடற்கரையில் தடையை மீறி பொதுக் கூட்டம் நடத்தச் சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் வரதராஜன் உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.

மெரீனா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டம் நடைமுறையில் இருப்பதால் அங்கு பொதுக் கூட்டம் நடத்தக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந் நிலையில் பாரதியாரின் நினைவு நாளையொட்டி கடற்கரையில் பொதுக் கூட்டம் நடத்தப் போவதாகநல்லகண்ணு அறிவித்திருந்தார். அரசின் தடையை மீறுவோம் என்றும் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து கடற்கரையில் போலீஸார் குவிக்கப்பட்டனர். நல்லகண்ணு, வரதராஜன் உள்ளிட்ட கம்யூனிஸ்ட்கட்சியின் மூத்த தலைவர்களும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கடற்கரையை நோக்கி ஊர்வலமாகக் கிளம்பமுயன்றபோது அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.

கைதுக்கு முன் நல்லகண்ணு நிருபர்களிடம் கூறுகையில், பாரதியார் இந்த கடற்கரையில்தான் தனது சுதந்திரப்போராட்ட கூட்டங்களையும், ரகசிய ஆலோசனைகளையும் மேற்கொண்டார். பல பாடல்களையும் இங்கே தான்அவர் புனைந்தார். அந்தக் கடற்கரையில் அவரது நினைவு தினக் கூட்டத்தை நடத்த தடை விதிக்கிறது இந்த அரசுஎன்றார்.

இந்தக் கைது சம்பவம் தமிழகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந் நிலையில் கைதானவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+