வைரமுத்துவின் ஆங்கில கவிதை தொகுப்பு: கலாம் வெளியிட்டார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

கவியரசு வைரமுத்து எழுதிய 58 கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை குடியரசுத் தலைவர்டாக்டர் அப்துல் கலாம் டெல்லியில் வெளியிட்டார்.

கவிஞர் வைரமுத்துவின் 180 கவிதைகள் தொகுக்கப்பட்டு, வைரமுத்து கவிதைகள் என்ற பெயரில்நூலாக வெளியாகியுள்ளது. இதில் சிறந்த 58 கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

எ டிராப் இன் சர்ச் ஆப் த ஓசன் (கடலை தேடும் நீர்த் துளி) என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளஇந்தக் கவிதைத் தொகுப்பு, குடியரசுத் தலைவர் அப்துல் கலாமால் டெல்லியில் வெளியிடப்பட்டது.

டெல்லி தமிழ்ச் சங்கத்தில் நடந்த இந்த நூல் வெளியீட்டு விழாவில் தமிழில் பேசிய கலாம்கூறியதாவது:

பூமி சிரித்து நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?. பூமி சிரிக்கும். பூமியின் மேற் பகுதியில் பூக்கள் மலரும்போதெல்லாம், அது பூமியின் சிரிப்பே என்று எனக்குள் ஒரு எண்ணம்.

எனவே பூக்கள் மலருகிற போதெல்லாம் பூமி சிரிப்பதாகவே நாம் கருத வேண்டும். பூக்களின்மலர்ச்சியில் தான் பூமி மகிழ்கிறது என்றார் கலாம்.

பின்னர் வைரமுத்து பேசுகையில் கலாமைப் புகழ்ந்து ஒரு அட்டகாசமான கவிதை வாசித்தார். அந்தக்கவிதை:

கன்னியாகுமரியில் செய்த கடும் தவத்திற்கு,

ராமேஸ்வரத்தில் வரம் கிடைத்தது,

அதன் பெயர் அப்துல் கலாம்.

அன்று, இந்தியாவுக்குள் உன் வீடு ,

இன்று உன் வீட்டிற்குள் இந்தியா.

மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசையை துறந்தவர்

விண் ஆசையை மட்டும் துறக்க முடியவில்லை.

முடி சூடிய மன்னன் நீ!

ஒரு கண்ணில் வள்ளுவன் பாடிய கனவு

மறு கண்ணில் பாரதியின் கனவு.

பாரதியே, உனது கனவு நனவாக

என் கலாம் கனவை நனவாக்கு

இவவாறு வைரமுத்து கவிதை வாசித்தார்.

இந் நிகழ்ச்சியில் ஏராளமான கவிஞர்களும் கலந்து கொண்டு கலாம் குறித்து கவிதைகள் பாடினர்.அனைத்தையும் கலாம் ரசித்துக் கேட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+