மருது பாண்டியர் நினைவு தபால் தலை: வாஜ்பாய்க்கு ஜெ. கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மருது பாண்டியர்கள் நினைவாக தபால் தலை வெளியிட வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய்க்கு முதல்வர்ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

அவரது கடித விவரம்:

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து முதன்முதலில் குரல் எழுப்பியவர்கள் மருது சகோதரர்கள். சிவகங்கைசீமையை ஆண்ட அவர்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக போரிட்டு தங்களது உயிரையும் நீத்தனர்.

200 ஆண்டுகளுக்கு முன்பே மதசார்பின்மைக்கும் சின்னமாக விளங்கினர் மருது பாண்டியர்கள். அவர்களது202வது மறைவு தினம் வரும் அக்டோபர் 24ம் தேதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.

அந்த தமிழச் சகோதரர்களின் பெருமை குறித்து நான் விளக்க வேண்டியதில்லை. அவர்களது தேசப் பற்றும்,வீரமும் யாருக்கும் சளைத்ததும் அல்ல.

அவர்கள் நினைவாக தபால் தலை வெளியிட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய தகவல்தொடர்பு அமைச்சகம் நிராகத்துள்ளது. இது வருத்தம் தருகிறது, கண்டனத்துக்குரியது.

இதனால் நீங்கள் தலையிட்டு அந்த மன்னர்களின் நினைவாக தபால் தலையை வெளியிடச் செய்ய வேண்டும். இதுதான் தேசத்துக்காக உயிர் நீத்த அந்த மாமன்னர்களுக்கு சரியான அஞ்சலியாக இருக்க முடியும்.

இவ்வாறு ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+